கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

உங்களுடைய ஆஸ்திரேலிய பயணக்கட்டுரைகளைப் படித்தபோது எனக்கு
நியுஸிலாந்தில் உள்ள தமிழ் மணியைப் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது.
ஒருவேளை நீங்கள் இதைப் பற்றி படித்திருக்கலாம். இல்லையெனில் இந்த
வலைப்பக்கத்தை பார்க்கவும்.

http://www.teara.govt.nz/NewZealanders/NewZealandPeoples/SriLankans/1/ENZ-Resources/Standard/3/en

மேலும் சில விவரங்களுக்கு : http://www.zealand.org.nz/history.htm

முதல் பக்கத்தில் உள்ள Radical சுட்டியை க்ளிக் செய்து, வரும் பக்கத்தில்
சற்றே கீழே சென்றீர்களென்றால் “Tamils c 1170” என்ற சுட்டி வரும். அது
அழைத்து செல்லும் பக்கத்தில் இந்த மணியைப் பற்றி இன்னும் சில விவரங்கள்
உள்ளன.

நன்றி

Karthikeyan D

அன்புள்ள கார்த்திகேயன்

நன்றி. இணைப்புக்கு. நான் நியூசிலாந்து பக்கமே போகவில்லை. என் பயணம் என்பது ஒரு சோறுப்பதம்போல ஆஸ்திரேலியாவைப் பார்ப்பது மட்டுமே
ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார்

விளம்பரங்கள் பற்றிய ஒரு BLOGஐ ஆரம்பித்திருக்கிறேன். நீங்கள் படித்தால் மிகுந்த சந்தோஷம் அடைவேன்
 

அன்புடன் சந்தோஷ்

அன்புள்ள ஜெ,
 
உஸ்தாத் சலாமத் அலி கான் என்று ஒரு பாடகர் இருக்கிறார் என்று பாலமுரளிக்ருஷ்ணா ஒருமுறை சொல்லியிருந்தார்.  தற்செயலாக அவரது பாடல் ஒன்றை இணையத்தில் கேட்டேன். முடிந்தால் கேட்டுப்பார்க்கவும். உங்கள் நேரம் இருந்தால் ஒரு 10 நிமிடம்.
 
 
இந்த அவையும், அமைப்பும், அவர் பாடும் முறையும் மிகவும் கவர்வதாக இருக்கிறது.
 
நன்றி
ராம்
முந்தைய கட்டுரைகாந்தியின் துரோகம்
அடுத்த கட்டுரைதெலுங்கு குடியேற்றம்:கடிதமும் பதிலும்