http://jeyamohan.in/?p=2160
-ல் எம்.டி.யின் நாலுகட்டு, இரண்டாமிடம் இரண்டும் தமிழில் கிடைக்கின்றன
என்று சொல்லியிருக்கிறீர்கள். ‘காலமும்’ கிடைக்கின்றது. மணவை முஸ்தபா
மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கின்றது. விலை 100 ரூ.
பக்கங்கள் 368.
ISBN-81-260-1254-4.
நன்றிகள்.
அன்புடன்,
இரா.வசந்த குமார்.
உங்களுடைய “இயற்கை உணவு : என் அனுபவம்” (http://jeyamohan.in/?p=373)
என்ற கட்டுரையை மீண்டும் ஒரு முறை இன்று படித்தேன். அதில் நீங்கள்
குறிப்பிட்டுள்ள “நோயின்றி வாழ முடியாதா?” என்ற நூல் இன்றும்
கிடைக்கிறதா? Google-ல் தேடிப் பார்த்தேன். சரியான தகவல் கிடைக்கவில்லை.
நன்றி
கார்த்திகேயன்
இப்போது அந்த நூல் சந்தையில் உள்ளது என்று படவில்லை. அம்பாசமுத்திரம் சிவசைலம் அருகே உள்ள ந்த ஆசிரமத்தில் ‘நல்வாழ்வு ஆசிரமம்’ ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் அதைவிட மேலும் விரிவான சிறந்த இயற்கை உணவு நூல்கள் கிடைக்கின்றன
ஜெ
’கங்காரு’வா ’காங்கரு’வா?
காங்கரு என்றுதான் சொல்லுவார்கள் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
எஸ். கிருஷ்ணமூர்த்தி
ஆஸ்திரேலியாவே ஒரு பன்முக பண்பாட்டு நாடு. வகைவகையான உச்சரிப்புகள். கேங்கரு என்று தொலைக்காட்சியில் சொல்கிறார்கள். ஆனால் காங்கரு கென்கேரு என்றெல்லாம் காதில் விழுந்தன. நம்முடைய உச்சரிப்பும் ஆஸ்திரேலியப்பண்பாட்டுக்கு கொடையாக இருக்கட்டுமே
ஜெ
நான் கூட இளைக்க வேண்டும். ஆம்-வேயின் புரதப் பொடியை இரவில் சாப்பிட்டிற்கு பதில் அருந்தினால் உடல் இளைக்கும் என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.
சாஸ்த்ர பிரகாரம், சூர்யா அஸ்தமனத்திற்குப் பின் உணவு உட்கொள்ளல் கூடாது, எனவே மாலை ஐந்து மணி அளவிலேயே ஏதேனும் ஆதாரம் செய்துவிட்டு, இரவில் சிறிது மோர் அருந்தலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
நாளை முதல் இதில் ஏதாவது ஒன்றைச் செய்துவிடுவேன் என்ற தினம் மனவுறுதி பூண்டு விட்டு, சுலபமாக அடுத்த நாள் கச்சேரி முடிந்து இரவு பத்து மணிக்கு மேல் வீடடைந்ததும் வயிற்றின் குரலுக்கு செவி சாய்த்தபடி நாட்கள் நகர்கின்றன…
—
wishes,
Erode Nagaraj.
1. http://ramsabode.wordpress.com/2006/10/07/erode-nagaraj/
2. http://www.chennaionline.com/chennaicitizen/2004/02nagarajan.asp
3. http://www.nscottrobinson.com/southindiaperc.php
அன்புள்ள நாகராஜ்
1 ping
Daily News About Google : A few links about Google - Thursday, 21 May 2009 20:45
May 22, 2009 at 9:30 am (UTC 5.5) Link to this comment
[…] கடிதங்கள் […]