விடைகொடுத்தல்

 

வரலாறு வாசல்கள் தோறும் காத்து நிற்கிறது
நகம் கடித்து
தவிப்புடன்.
ஒவ்வொரு முறையும்
நான் சொல்லவந்தது அதுவல்ல என்று
கண்ணீருடன் சொல்ல முயல்கிறது
சொற்களைத்திரட்டியும்
தொண்டையைக் கனைத்துக்கொண்டும்
விம்மியும் ஏங்கியும்
அது பேசமுயல்கிறது

தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு
அவமானப்படுத்தப்பட்டு
திரும்பிச்செல்கிறது
இன்னொரு வாசலுக்கு.

அது வரும்போது
நம்முடனேயே இருக்கும்போது
நமக்குப்பின்னாலிருந்து தவிக்கும்போது
நாம் அதை கேட்பதில்லை
உணர்வதுமில்லை

அது விலகிச்செல்வதன்
சோகம் கனக்கும் மெல்லிய காலடியோசை மட்டும்
அத்தனை தெளிவாகக் கேட்கிறது.

சிலசமயம் இடியோசை போல.

முந்தைய கட்டுரைஅனல் காற்று, கடிதம்
அடுத்த கட்டுரை‘யாரும் திரும்பவில்லை’