இ. எம். எஸ்ஸ¤ம் கேரள தேசியமும்

இ.எம் எஸ் [இளங்குளம் மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு] இறந்தபோது மலையாளிகளுக்கு அம்மரணம் ஒரு பெரிய ஊடக நிகழ்வாக இருந்தது கேரளத்தில். அதற்கு முன்பு அப்படி கொண்டாடப்பட்ட பெரிய மரணம் எழுத்தாளர்  வைக்கம் முகம்மது பஷீருடையது. பிதாவழிபாட்டு மனநிலையின் கூறுகள் அதிலிருந்தன என்று சொன்ன ஆய்வாளர் உண்டு. கேரளத்தின் கிட்டத்தட்ட ஐம்பது செய்தித்தாள்களிலெல்லாம் அட்டைச்செய்தி அதுஇதான். வார மாத இதழ்களில் – இவை முந்நூறுக்கும் மேல் — அட்டைப்படமும் முக்கியச் செய்தியும் அவர்தான். பல இதழ்களில் அட்டை தொட்டு அட்டை வரை அவர்தான் இடம்பெற்றிருந்தார் . இடதுசாரி இதழ்களில் மட்டுமல்ல உக்கிரமான வலதுசாரி இதழ்களிலும் அப்படித்தான்.

ஆலப்புழாவில் வேலைபார்க்கும் என் தமிழ் நண்பர் எனக்கு எழுதிய கடிதத்தில் இதை குறிப்பிட்டிருந்தார் . நண்பருக்கு மலையாளம் தெரியாது. கேரள அரசியலில் ஆர்வமும் கிடையாது . இந்த செய்திப்புயலை கண்டு வியந்து சில செய்திகளை மட்டும் படிக்கச்சொல்லி கேட்டிருக்கிறார் .இ.எம் .எஸ் பற்றிய வர்ணனைகள் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருந்தன. ‘ முதன்மையான மலையாளி / கேரளீயன் , அர்ப்பண உணர்வுள்ள கம்யூனிஸ்டு, தியாகமும் மனிதாபிமானமும் நிரம்பிய மாபெரும் மனிதன’ .இவ்வரிசையில் முதலில் அவர் ஒரு மலையாளி என்று சொல்லப்பட்டதுதான் நண்பரை குழப்பியது. இ.எம் .எஸ் ஒரு கம்யூனிஸ்டு அல்லவா, அவரது கொள்கை சர்வதேசியம் அல்லவா, அப்படியானால் இந்த சிறப்புக்கூற்று அவருக்கு அணிசேர்ப்பதாகுமா என்றார் அவர்.

 

EMS Namboodiripad by Lampsy.

 

 

நான் எழுதிய பதிலில் அதை விளக்கியிருந்தேன் . இ.எம் .எஸ் தன்னை ஒரு மலையாளி  என்று எப்போதுமே உணர்ந்திருந்தார் , அதை எல்லா தருணத்திலும் முன்வைக்கவும் செய்தார் . இந்த உணர்வு ஓர் எதிர்மறை மனநிலையாக அவரிடம் உருக்கொள்ளவில்லை. அவர் அங்கிருந்து தன்னை கண்டடையத் தொடங்கினார். தன்னை ஓர் இந்தியனாகவும் சர்வதேசியனாகவும் அவர் உணர்ந்தது அதன் அடுத்தகட்ட வளர்ச்சிநிலையாகவே. ஒரு இந்தியன் என்பது ஒரு சர்வதேசியன் என்பதற்கு எதிரானதல்ல, ஒரு இந்தியன் என்பது ஒரு மலையாளி என்பதற்கு எதிரானதுமல்ல என்று அவர் விளக்கியிருக்கிறார் . இ.எம் .எஸ்அவர்களின் சர்வதேசப் பார்வை உலகறிந்தது . ” இரிஞ்ஞாலக்குடயில் இடிமின்னலடித்தால் இந்தோனேஷியாவில் காரணம் தேடுபவர் ” என்று அவர் பழிக்கப்பட்டதுண்டு. இதில் நாம் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு, இந்தோனேஷியாவின் நிகழ்வுகளைக் கூட இரிஞ்ஞாலக்குடாவின் இடிமின்னல் மூலம் அணுகக் கூடியவர் என்பதே அது . இது அவரது அடிப்படை இயல்பு. அரசியலுக்கு அப்பால் அவர் மிக முக்கியமான ஓர் இலக்கிய விமரிசகர் , இலக்கிய வரலாற்றாசிரியர் , கலாச்சார விமரிசகர் ,சமூகவியலாய்வாளைர் , இதழாளர். அதி தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு தலைமறைவு வாழ்வில் இருந்தபோதும் கூட அவர் இலக்கியவாசிப்பையும் விமரிசனத்தையும் நிறுத்தவில்லை. பரபரப்பு மிக்க அரசியல் வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே அவர் ஆக்கிய நூல்கள் பல .அவற்றில் கேரள சுதந்திரப்போராட்ட வரலாறு முதலிய நூல்கள் முழுவாழ்வையே அர்ப்பணித்து எழுதப்பட்டவை என்ற பிரமையை எழுப்பும் அளவுக்கு கலைக்களஞ்சியத்தன்மை கொண்டவை.

இ எம் எஸ் விரிவான ஓர் அரசியல் பார்வை கொண்டிருந்தபோதிலும்,  வலுவான ஒரு தேசியக் கட்சிக்கு தலைமைப்பொறுப்பில் இருந்தபோதிலும் ஓர் இந்திய அரசியல்வாதியாக அறியப்பட்டது குறைவே என்ற உண்மையை இங்கு நாம் கணக்கில் கொண்டாக வேண்டும். அவர் ஒரு கேரள அரசியல்வாதிகாக தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டார் என்பதை ஒரு குற்றச்சாட்டாக அவரது மாணவர்கள் கூட சொன்னது உண்டு. அவரது கவனம் கேரள மக்கள் மீது ,அவர்களுடைய கலாச்சாரம் மீதும் அரசியல் மீதும்தான்,  குவிந்திருந்தது என்பதை எவருமே மறுக்கமுடியாது. இந்த அம்சமே அவரை தேசிய அரசியல்தலைவராக ஆக முடியாமல் செய்தது என்றும் சொல்லலாம்.  இன்று அனைத்து மலையாளிகளைலும் மதிக்கப்படும் பிதாமக வடிவமாக ஆனது அவர் ஒரு மகத்தான அரசியல்தலைவர் என்பதனால் அல்ல . சொல்லப்போனால் அரசியல் தலைவராக மட்டும் அவர் இருந்திருந்தால் அவர் மறக்கப்பட்டிருப்பார் .கேரள சுதந்திரப்போராட்டத்தின் தலைவர்களைன கேளப்பன், கெ. பி .கேசவ மேனோன் போன்றவர்கள் இன்று சரித்திரப்பெயர்கள் மட்டுமே. வாழ்ந்த காலத்தில் இ.எம்.எஸ் உடன் ஒப்பிடும்போது பெரிய ஆளுமையாக இருந்த கம்யூனிஸ்டுதலைவர்கள் பி கிருஷ்ணபிள்ளை , ஏ. கே.கோபாலன் ஆகியொரும் அப்படித்தான். இ எம் எஸ் நம் காலகட்டத்தின் முக்கியமான அரசியல் தலைவர் என்பதை மறுக்கவில்லை .ஆனால் அவர் முக்கியப்படுத்தப்படுவது, கௌரவிக்கப்படுவது அவர் கேரளக் கலாச்சாரத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்காகவே . என் விரிவான கடிதம் நண்பரை திருப்தி செய்யவில்லை.

தமிழ்தேசியத்தின் பின்னணியில்……
========================

நண்பரின் சிக்கல் அவர் தேசியம் என்பதை தமிழ்நாட்டு அரசியலுடன் சேர்த்து யோசிப்பதனால்தான். இங்கே இந்திய தேசியம் என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானதும் அன்னியமானதுமான ஒரு கட்டுமானம். தமிழ் தேசியம் எப்போதுமே இந்தியமயமாதலையும் , உலகமயமாதலையும்   எதிர்க்கும் போக்கு என அறியப்படுகிறது. அதாவது அது ஒருவகை குறுக்கல்போக்கு. உட்சுருங்கும் தன்மை கொண்டது. தமிழக அரசியலில் தேசியக்கற்பிதங்களின் இடம் சிக்கலானது. அந்த விவாதங்களுக்குள் போக நான் இப்போது விரும்பவில்லை . ஆனால் என் புரிதல்கள் சிலவற்றை மட்டும் கோடி காட்ட விரும்புகிறேன். இங்கேயுள்ள தமிழ்தேசிய உணர்வு ஓர் எதிர்ப்பியக்கமாகவே உருவானதாகும். வெள்ளைய ஆட்சியின்கீழ் சலுகையும் அதிகாரமும் பெற்று வல்லமையுடன் விளங்கிய பிராமண ஆதிக்கத்துக்கு எதிரானதாக அது உருவானது. வரலாற்றை பின்னுக்கு நீட்டினால் மன்னர்கள் காலத்தில்  சலுகையும் அதிகாரமும் பெற்று வல்லமையுடன் விளங்கிய பிராமண மதங்களுக்கு எதிராக எழுந்த பக்தி இயக்கத்தில் அதன் வேர்களை நாம் காணமுடியும். பிராமணரல்லாத மக்களை இணைப்பதற்கான பொதுச்சொல்லாக ‘திராவிட இனம்’ என்ற கருதுகோள் [கால்டுவெல்லில் இருந்து வேளைளர்களைல் பெறப்பட்டு ] பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக இன அடிப்படைத்தேசியமே இங்கே முதலில் அடையாளம் காணப்பட்டது. அதற்குக் காரணம் தெளிவு. இங்கே பிராமணரல்லாத மக்களில் தமிழரல்லாதார் பெருமளவில் உள்ளனர். மெல்ல , எந்த காலகட்டத்தில் என்று தெரியாமல் , எவ்வித அறிவார்ந்த விவாதப்புயலும் வீசாமல், திராவிட இனத்தேசிய உருவகம் தமிழ் மொழித்தேசிய உருவகத்துக்கு மாறிக் கொண்டது. இன்று இவ்விரு சொல்லாட்சிகளும் ஒன்றேபோல பலரால் பயன்படுத்தப்படுகின்றன.

ஆரம்பம் முதலே எதிர்மறைத்தன்மை தமிழகத் தேசிய உருவகத்தின் அடிப்படை உணர்வாக இருந்துள்ளது .அத்துடன் அது அடிப்படையிலேயே பிராமணரல்லாத உயர்சாதிகளின் — வேளைளரின் — பண்பாட்டுக் கூறுகளைத்தான்  தமிழ்த்தேசிய அடையாளமாக முன்வைத்தது. சாதிப்பற்றும் சைவப் பற்றும் மிக்க சுந்தரம் பிள்ளையின் பாடல் அதம் ‘தேசிய கீதம்’ . அதிலேயே ‘ஆரியம்’ மீதான கசப்பு நேரடியாக வெளிப்படுகிறது. [அப்பாடல் தெரிவு செய்யப்பட்டமை, அதில் ஆரியம் பற்றிய குறிப்பு விலக்கப்பட்டமை எல்லாமே ஒரு குறியீட்டு வாசிப்புக்கு உரியவை] தமிழ்த்தாயின் சிலைக்கும் பாரதமாதாவின் சிலைக்கும் அதிக வித்தியாசம் ஏதும் இல்லை .பிற்பாடு சைவத்திலிருந்து விலகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை உள்ளிழுக்க தமிழ் தேசியம் முயன்ற போது அச்சாதிகளின் அடையாளங்களும் அதில் ஓரளவுக்கு நுழைந்தன. ஆனாலும் மையமாக உள்ள கருத்தியல் , அதாவது இணைக்கும் சரடு வேளைளக் கருத்தியலேயாகும். அதன் முக்கியப்படிமங்கள் அனைத்துமே சைவ வேளைள மரபை சார்ந்தவை. ஆனால் இங்குள்ள மக்ககளில் கணிசமானோர், தலித்துக்களில் பாதிக்கும் அதிகமானோர் , தமிழை தாய்மொழியாகக் கொள்ளைதவர்கள் என்ற முறையில் தமிழ்மொழிசார்ந்த தேசியம் என்பது கடுமையான எதிர்மறைத்தன்மை கொண்டதாக , யார்யாரை விலக்கவேண்டும் என்று பட்டியலிடும் ஓர் அளவுகோலாக மட்டுமே உள்ளது. தமிழ்த் தேசியம் சார்ந்து நம் காதில் விழும் குரல்கள் எல்லாமே வெறுப்பின், கோபத்தின் குரல்களைகவே உள்ளன. அந்த கோபம் தமிழை தாய்மொழியாகக் கொள்ளைதவர்களில்  தலித்துகளுக்கு எதிராக அடக்கி வாசிக்கப்படுகிறது, இஸ்லாமியர்களுக்கு எதிராக புதிரான மௌனம் காக்கப்படுகிறது ,  பிராமணரல்லாத உயர்சாதியினர் விஷயத்தில் மெல்லிய பொதுவான எச்சரிக்கையாக வெளிப்படுகிறது. பிராமணர்கள் சார்ந்தும் , இந்திய தேசியம் சார்ந்தும் , உலகமய அடையாளங்கள் சார்ந்தும் அது கடும் கோபத்துடன் வெளிப்படுகிறது. இன்று அதில் ஆக்கப்பூர்வ அம்சங்கள் குறைவுதான். வேலிகட்டிக் கொண்டு உள்ளே அடங்கும் மனநிலையே முனைப்பு கொண்டுள்ளது. இங்கு தமிழ் தேசியம் என்பது சிறு குழுவுக்குள் ஒருவகை உணர்ச்சிப் பிரகடனமாக மட்டும் வெளிப்படுகையில் அதன் பல முரண்பாடுகள் எவராலும் பொருட்படுத்தப்படுவதில்லை. உண்மையான அதிகாரத்துக்கு  அருகே தமிழ்தேசியம் செல்லுமென்றால் உடனே இஸ்லாமிய அடையாளம் ,தலித் அடையாளம் முதலியவை அதற்கு பெரும் சவாலாக முன்னெழுந்துவரும் என்பதற்கு சிறந்த நடைமுறைச்சான்று சமகால ஈழ நிகழ்வுகள்.

இந்தப்பின்னணியில் நாம் இ.எம் .எஸ் முன்வைத்த கேரள தேசிய அடையாளம் பற்றி தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. தேசியம் என்ற சொல்லை அதற்கு பயன்படுத்துவது சற்று அதிகப்படியோ என்று படுகிறது . ‘கலாச்சார சுயம் ‘ என்ற சொல்லை பயன்படுத்தலாம். ஆனால் அதில் ஒரு தேசிய உருவகத்துக்கான ‘சாத்தியம்’ ஒளிந்துள்ளது என்று சொல்லலாம். அதாவது தேசிய கற்பிதமானது இங்கே நில எல்லை, அரசியல் சுதந்திரம், பொருளைதார தனித்துவம், இனரீதியான தன்னடையாளம் என்ற தளங்களில் எழுப்பப் படவில்லை. குழப்பங்களைத் தவிர்க்க இதை முதலிலேயே தெளிவுபடுத்தி விடவேண்டும். இவை ஒவ்வொன்றிலும் இ.எம் .எஸ் எடுத்த நிலைப்பாடு என்ன என்பது பிறகு தெளிவுபடுத்தபடும். முக்கியமாக உடனடியாக சொல்லப்படவேண்டியது  இ.எம் .எஸ் ஒருநிலையிலும் இனவாதத்தை சற்றும் ஏற்கக் கூடியவர் அல்ல என்பதுதான். அதை அவர் வெறுத்தார், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை முன்வைத்தார். கேரளம் என்ற மக்கள்த் திரளின் வாழ்க்கையின் பொதுவான வெளிப்பாடாக உள்ள கலாச்சாரத்தின் அடையாளம் அதன் இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் ஆகியவை குறித்தே இ எம் எஸ் பேசுகிறார். அதாவது இ எம் எஸ் ன் கலாச்சார அணுகுமுறையானது மிக மிக நேர்நிலைத்தன்மை கொண்ட ஒன்று . கலாச்சாரதேசிய அடையாளத்தினை எவருக்கும் எதிராக அவர் கட்டமைக்கவில்லை. அவ்வடையாளம் எவரையுமே விலக்கும் தன்மைகொண்டிருக்கவில்லை, அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை கொண்டிருந்தது . தன்னை துண்டித்துக் கொள்ளும் போக்குக்கு மாறாக அது தன்னை இந்திய தேசியத்திலும் உலக தேசியத்திலும் பிணைத்துக் கொள்ளும்போக்கு கொண்டிருந்தது. இந்த வேறுபாட்டை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டு இ எம் எஸ்ஸின் பங்களிப்பை பார்க்கவேண்டிய தேவை உள்ளது.

இந்திய தேசியங்களின் வளர்ச்சிநிலைகள்
===============================

இந்தியாவிலுள்ள எல்லா பிராந்திய தேசியங்களின் இயல்புகளும் ஏறத்தாழ ஒரே வளர்ச்சிமுறை கொண்டவை என்பதைக் காணலாம். அதாவது அப்பகுதியில் உள்ள தொல்பழங்குடி வாழ்வில் அத்தேசியங்களின் கூறுகள் இருக்கும். அவை தமிழ்நாடு போல பூரண வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்கலாம். கேரளம் அல்லது அஸ்ஸாம் போல அரைப்பழங்குடி நிலையில் இருக்கலாம். அல்லது பௌத்தம் சமணம் போன்ற பழங்கால சம்ஸ்கிருத எதிர்ப்பு பண்பாட்டு அலைகளினால் வளர்க்கப்பட்டு தனித்தன்மைகொண்டவையாக இருக்கலாம், கர்நாடகம் மராட்டியம் போல. இந்த தனித்தேசிய பண்பாட்டு கூறுகளுடன் சம்ஸ்கிருத பண்பாட்டுக் கூறுகள் இணைந்து அப்பகுதியின் மைய ஓட்ட பண்பாடு உருவாகியிருக்கும் . பக்தி இயக்கத்தின் காலகட்டத்தில்தான் அந்த தொல்குடி பண்பாட்டுக் கூறுகள் தேசியத் தனித்தன்மையாக அடையாளம் காணப்பட்டிருக்கும். அவை வலிமை பெற்று ஒரு இணைப்பண்பாட்டு ஓட்டமாக இருந்துகொண்டிருக்கும் . அதாவது சம்ஸ்கிருதச் செல்வாக்குள்ள மைய ஓட்டம் உயர்தளம் சார்ந்ததும், அதிகாரத்துக்கு நெருக்கமானதும் ஆன பண்பாட்டு அம்சமாக இருக்கும்போது இந்த இணைப்பண்பாட்டு ஓட்டம் பொதுமக்கள் சார்பு கொண்டதாக இருக்கும். தமிழ் தவிர்த்த பிற மொழிகளில் சம்ஸ்கிருத சார்புள்ள ஓட்டம் செவ்வியல்தன்மையும் , நுட்பமும் உடையதாக இருக்கையில் இணைப்பண்பாட்டு ஓட்டம் நாட்டார்தன்மையும் பண்படாத இலக்கியத்தன்மையும் கொண்டதாக இருக்கிறது.

உதாரணங்கள் பல. மராட்டியில் ஞானேஸ்வரி பகவத் கீதையை அப்போது மிக கொச்சையாக கருதப்பட்ட மராட்டிய மொழியில் எழுதினார்.அதுவெ மராட்டிய மொழியின் முதல் நூல் என்றும் மராட்டிய கலாச்சாரதேசியத்தின் முதல் படி என்றும் கூறப்படுகிறது. கர்நாடகத்தில் இந்த இடம் அங்குள்ள ‘வசன’ இலக்கியத்துக்கு உள்ளது . [வீரசைவர்களைன அல்லம பிரபு , பசவண்ணர், அக்க மகாதேவி போன்ற சித்தர்கள் மக்களுக்குரிய மொழியில் எழுதிய சுதந்திரமான யாப்புள்ள கவிதைகளே வசனம் எனப்படுகின்றன. பாவண்ணன் மொழிபெயர்ப்பில் இவை விரிவான குறிப்புகளுடன் சொல் புதிது ஆறாவது இதழில் வெளிவந்துள்ளன] தமிழில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோரின் தமிழ் ஆக்கங்களே தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு வழி வகுத்தன என நாம் அறிவோம். மலையாளத்தில் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் ராமாயண மகாபாரத கதைகளை கிளிப்பாட்டு என்ற எளி£ய நாட்டார்ப்பாடல் வடிவில் மக்கள்மொழியில் முன்வைத்ததே மலையாளம் என்ற மொழியின் பிறப்புக்கும் கேரளக் கலாச்சார தேசியத்தின் உருவாக்கத்துக்கும் முதல் புள்ளி ஆகும். இன்றும் கேரளத்தில் மிக அதிகமான மக்கள் செல்வாக்குள்ள ஆக்கங்கள் அவருடைய படைப்புகளே. கேரளத்தில் ஒவ்வொரு மார்கழி மாதத்திலும் கேரள வீடுகளில் எழுத்தச்சனின் ஆக்கங்கள் ஒரு சடங்காகவே வாசிக்கப்படுகின்றன.

ஆங்கில ஆட்சியின் விளைவாக கல்வி மேம்பாடு அடைந்து இலக்கியம் போன்றவை வெகுஜன வாசிப்புக்கு வந்த காலத்தில் இந்த இணைப்பண்பாட்டு ஓட்டம் பரவலான மக்கள் ஆதரவு பெற்று வலிமையும் தீவிரமும் கொண்டது எனக் காணலாம். ஆங்கிலத்தின் தொடர்பால் அதில் நவீனத்தன்மை குடியேறுகிறது. அத்துடன் பல இந்திய மொழிகளில் இந்திய மறுமலர்ச்சியின் விளைவாக உருவான தத்துவார்த்த தேடல் பிரதிபலித்து செவ்வியல்சார்ந்த போக்குகளும் உருவாயின. இந்திய நிலப்பகுதி முழுக்க பரவி பொதுவான பண்பாட்டு அமைப்பாகவும், பிராந்தியப் பண்பாடுகளை இணைக்கும் கூறாகவும் இருந்தது சம்ஸ்கிருதப் பண்பாடே . ஆங்கிலக் கல்வியின் விளைவாக உருவான நவீனமயமாதல் போக்கும் இந்தியா முழுமைக்குமான பொதுத்தன்மையும் , பிறவற்றை இணைக்கும் தன்மையும் கொண்டிருந்தது. ஆகவே இந்திய தேசிய என்ற கருத்தாக்கம் வலிமையாக உருவானபோது சம்ஸ்கிருத பண்பாடு மற்றும் நவீன ஐரோப்பிய பண்பாடு ஆகியவை இந்திய தேசியத்தின் மையப் பண்பாட்டு கூறுகளைக முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கு இடையேயான உரையாடலின் விளைவே நாம் காணும் இந்திய மறுமலர்ச்சி .விவேகானந்தர் முதல் நேரு வரை அனைவருமே இந்த இணைவின் ஆக்கங்களே.

இவ்வாறு இந்தியப் பெருந்தேசியம் முன்வைக்கப்பட்டபோது அது பொதுமைப்படுத்தும் போக்கை தீவிரமாக மேற்கொண்டமையால் அதற்கு எதிராக இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அப்பகுதிக்குரிய தனித்தேசிய , பண்பாட்டுக் கூறுகள் வெளிப்பட்டன, வளர்ந்தன. இந்திய சுதந்திரப்போராட்ட அலைதான் இந்தியாவில் பிராந்ந்திய தேசிய உணர்வை உருவாக்கியது என்பது வரலாறு. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தேசியப் பண்பாட்டு நாயகர்களே தனியான பிராந்திய தேசியங்களையும் வளர்த்தெடுத்தனர் என்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். குவெம்பு [கர்நாடகம்] வள்ளத்தோள் நாராயண மேனோன் [ மலையாளம்] தாகூர் , பங்கிம் சந்திர சட்டர்ஜி [வங்கம்] போன்றவர்கள் இந்திய தேசிய விடுதலைப்போராட்டத்தின் கலாச்சார நாயகர்கள். அந்தந்ந்த மொழிகளில் கலாச்சார தேசியம் சார்ந்த விழிப்பிற்கும் இவர்களே முன்னோடிகள் .இந்தியா சுதந்திரம் பெற்ற மறுகணமே இந்தியதேசிய உணர்வலைகளை விட பெரிதாக பிராந்திய தேசிய உணர்வுகள் எழுந்து மொழிவாரி மாநிலக் கோரிகையாக வளர்ந்ததும் , பஞ்சாபி சுபா, தெலுங்கானா போராட்டங்கள் உருவானதும் நாம் அறிந்ததே. இவர்களுடைய பொதுவான குணம் ஒன்றுண்டு. இவர்கள் இந்தியதேசியப் பண்பாட்டு கூறுகளை நிராகரிக்கவில்லை. அவற்றுக்கு இணையாக தங்கள் கலாச்சாரதேசியக் கூறுகளை முன்வைத்தார்கள் .

உதாரணமாக வள்ளத்தோள் நாராயணமேனன் * வேதங்களையும் இதிகாசங்களையும் மலையாளத்திற்கு மொழி பெயர்த்தார். ஒரு கோணத்தில் இது இந்திட தேசிய பண்பாட்டுப்பொதுக் கூறுகளை மலையாளத்துக்கு கொண்டுவருவது. மறு கோணத்தில் மலையாளம் என்ற முதிரா மொழியை ஒரு செவ்வியல் மொழியாக மாற்றும் பெரும் முயற்சி . சம்ஸ்கிருதத்துக்கு மலியாளம் விடுத்த சவால் அது. மலையாளத்தால் என்ன செய்ய முடியும் என்ற வினாவுக்கான பதில். வள்ளத்தோள் நாராயணமேனனின் இம்முயற்சிக்கு வைதீகர்கள் அளித்த கடுமையான எதிர்ப்பை இங்கே பதிவு செய்தாக வேண்டும். அவருக்கு பின்னாளில் காதுகேட்காமலானபோதுனதற்கு காரணம் புனிதமான வேதங்களை மிலேச்ச மொழியில் அவர் மொழிபெயர்த்ததுதான் என்று சொல்லப்பட்டது .அந்த வசையுரைகள் வள்ளத்தோளை இறுதிநாட்களில் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளைக்கின. இதற்கிணையாகவே கதகளி , கூடியாட்டம், சாக்கியார்கூத்து, மோகினியாட்டம் போன்ற கேரளக் கோயில் கலைகளை மதநீக்கம் செய்து பொதுவான கேரளக் கலைகளைக மாற்றியதும் வள்ளத்தோள் நாராயணமேனன் அவர்களே. இதற்காக அவர் உருவாக்கிய கேரள கலாமண்டலம் என்ற அமைப்பு [ ஷொர்ணூர் அருகே உள்ளது] இன்றும் கேரளத்தின் மிக முக்கியமான பெரும் கலாச்சார நிறுவனம். ஏறத்தாழ இதே செயல்பாடுகளை நாம் தாகூரின் வாழ்வில் காணலாம்.தாகூரின் சாதனை என்ன என்பதை குறியீட்டு ரீதியாக அங்குள்§ளைர் சொல்வதுண்டு. சைதன்ய மகாப்பிரபுவின் காலம் வரை உயர்ந்த விஷயங்களை சொல்ல தகுதியற்ற கொச்சை மொழியாக கருதப்பட்ட வங்க மொழியில் இன்று இரு நாடுகளின் தேசிய கீதங்கள் அமைந்திருப்பதே அவரது சாதனை.

இவ்வாறுதான் இந்திய கலாச்சாரத்தேசியங்கள் பிறந்து இன்றைய வடிவை அடைந்தன. இவற்றிலெல்லாம் அப்பகுதியின் மொழியே முக்கிய கலாச்சார , அல்லது தேசிய அடையாளமாக உள்ளது . திராவிட இயக்கம் மட்டுமே இனவாதத் தேசியத்தை முன்வைத்தது. தேசிய உருவகங்களில் மொழி முக்கியப் பங்களிப்பாற்றுவதற்கான காரணங்களை ஏற்கனவே சொல்லப்பட்ட சுருக்கமான சித்திரமே சொல்லிவிடும். பக்திகாலம் முதலே ஒரு பகுதியிலுள்ள மொழியேதிந்திய அளவிலான பொதுப்போக்குகளுக்கு எதிரான மாற்று ஆக இருந்துள்ளது. எழுத்தச்சன் கேரள தேசியத்தின் அடிப்படையை மலையாளம் மூலம் வகுத்துவிட்ட பிறகு பிறர் அதை ஒன்றும் செய்ய முடியாது.

கேரள தேசியத்தின் வரலாற்றுப் பின்புலம்
==============================

கேரள தேசியம் குறித்த கருத்தாக்கங்களின் வரலாற்றுப் பின்னணியை விளங்கிக்கொள்ள சில அடிப்படைப் புரிதல்கள் தேவை. இருவகையான கேரள வரலாற்று உருவகங்கள் உள்ளன. ஒன்று பேரா இளங்குளம் குஞ்ஞன் பிள்ளையால் முன்வைக்கப்பட்டது. இன்னொன்று இ எம் எஸ் நம்பூதிரிப்பாட்டு அவர்களைல் முன்வைக்கப்பட்டு பிற்பாடு பி கெ பாலகிருஷ்ணன் அவர்களைல் தீவிரப்படுத்தப்பட்டது. முதல் போக்கு அதிகார மையங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை உருவகிக்கும் பொதுவான நோக்கு. இ எம் எஸ் அவர்களின் நோக்கு மக்களின் வாழ்க்கை மாற்றங்களையும் சமூக அமைப்புகளில் அவை உருவாக்கும் வளர்ச்சிநிலைகளையும் அளவீடுகளைகக் கொண்ட மார்க்ஸிய நோக்கு.

கேரளம் ஆதிபழங்காலத்தில் தொல்தமிழகத்தின் ஒரு பகுதியாக , சேர நாடாக விளங்கி வந்தது என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது. இந்த கருத்து நிலையினை முக்கியமாக வலியுறுத்தி இதனடிப்படையில் நவீன கேரள வரலாற்று சித்திரம் ஒன்றை முதலில் உருவாக்கியவர் பேராசிரியர் இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை *  என்பவர். இவரது கருத்தின்படி சேரநாடு சங்ககாலம் முதல் நிலவி வந்தது. கடைசியில் மகோதயபுரம் [அல்லது மாக்கோதைபுரம்] என்று வழங்கப்பட்ட கொடுங்கல்லூரினை தலைமையிடமாகக் கொண்டு அவ்வரசு இருந்தது. அவர்களுக்கும் சோழநாட்டுக்கும் நடந்த நீண்ட காலப்போரின் விளைவாக சேரநாடு அழிந்தது.சிறுசிறு சிற்றரசர்களும் குறுநிலக்கிழார்களும் நாட்டை ஆண்டனர்.சேரநாட்டு மக்கள் கலாச்சாரச் சிதைவு கொண்டனர். இக்கலாச்சாரச் சிதைவை பயன்படுத்தி நம்பூதிரிகள் என்று பிற்காலத்தில்பெயர் கொண்ட பிராமணர்கள் கேரளத்தில் ஊடுருவினார்கள். இவர்கள் கேரளக் கலாச்சாரத்தை பிராமணியம் நோக்கியதாக திரிபடையச்செய்தார்கள் . கேரளத்தில் புழங்கிய ஆதிதமிழை சிதைத்து சம்ஸ்கிருதத்துடன் இணைத்து மலையாளம் என்ற மொழி உருவாக காரணமாக அமைந்தார்கள். பிற்காலத்தில் கேரள சிற்றரசர்களில் திருப்பாம்பரம் ஸ்வரூபம் என்ற பெருநிலக்கிழார் குடும்பம்  வேறு இரு குலங்களுடன் இணைந்து திருவிதாங்கூர்  மன்னர்குலமாக உருவெடுத்தது . கோழிக்கோடு பகுதியில் இருந்த குறுநில மன்னர் ஐரோப்பிய அராபிய கடல் வணிகர்கள் அளித்த கப்பத்தால் சாமூதிரி மன்னரானார். கொச்சி மன்னரும் இப்படி உருவானவரே . இளங்குளம் குஞ்ஞன் பிள்ளையின் கேரள சரித்திர சுருக்கம் இது.இவர்கள் வெள்ளைய ஆட்சி வரை போரிட்டும் இணைந்தும் கேரளத்தை ஆண்டனர். பிராமண சம்ஸ்கிருத ஊடுருவலால் மலையாளம் என்ற மொழி தமிழிலிருந்து பிரிந்து உருவாத்து. கேரள கலாச்சாரத்தின் தனித்தன்மை என்பது இந்தக் கலப்பே.

நேர் மாறான ஒரு சித்திரத்தை அளிப்பவர் வரலாற்றாசிரியரான பி கெ பாலகிருஷ்ணன்* . அவரது அணுகுமுறை மார்க்ஸிய நோக்கிலானது, இ.எம் எஸ் மற்றும் டி டி கோசாம்பியை அடியொற்றியது. ஆனால் அவர் மார்க்சியரல்ல. அவரை காந்தியவாதி என்றுதான் பொதுவாக சொல்லவேண்டும். வரலாற்றின் உள்ளுறைகளை அறிய ஆகச்சிறந்த கருவி என்ற வகையிலேயே அவர் மார்க்ஸிய ஆய்வுமுறையை கைக்கொள்கிறார். உற்பத்தி சக்திகள், உபரிக் குவிப்புமுறை போன்றவற்றை கணக்கில் கொண்டு வரலாற்றின் இயங்கு முறையைப்பற்றி யோசிப்பதும் வரலாற்றை முரண்பட்ட அதிகார சக்திகளுக்கிடையேயான மோதல் மற்றும் முயங்கலாக பார்ப்பதும் இப்பார்வையின் அடிப்படைகள் எனலாம். இவர் கூற்றுப்படி கேரள நிலப்பரப்பில் பெரும்பகுதி கடலில் நதிச்சேறு கொட்டி திட்டுகளைக உருவாகி வந்த  ‘கடல்வைப்பு ‘ பகுதிகளும் அணுகமுடியா கொடும்காடுகளும் கொண்டது. எனவே பெரிய நாகரீகமோ பேரரசோ இங்கு இருந்திருக்க நியாயமில்லை . கேரளத்தில் மிகச்சமீபகாலம் வரை வேளைண்நிலம் மிக குறைவே. வேளைண்மையில் ஈடுபட்டவர்கள் புலையர் [அல்லது செறுமன்] எனப்பட்ட ஒரே ஒரு தலித்சாதியினர் மட்டுமே. இவர்கள் பத்துசதம்கூட இல்லை. ஆகவே உபரி உருவாகியிருக்க நியாயமே இல்லை . கேரளத்தில் போடப்பட்ட முதல்சாலை திப்புசுல்தான் போட்டது. அங்குள்ள நில அமைப்புக்கு சாலைகளே சாத்தியமில்லை. ஆகவே உபரிசேமிப்பும் இருக்கவில்லை .அத்தனைக்கும் மேலாக கேரள சாதியமைப்பு இந்தியாவிலேயே மிகக் மிக கொடுமையானதாக இருந்தது . ஒவ்வொருசாதியும் பிறசாதியிலிருந்து பல அடிதூரம் விலகி நிற்க வேண்டும் என வகுக்கப்பட்டிருந்தது . மக்கள் வெவேறு நிலப்பகுதியில் பிறர் வாழ்வைதை அறியாமல் வாழ்ந்தபர். இது பழங்குடி வாழ்வுமுறையே ஒழிய உற்பத்தி , உபரிசேமிப்பு ஆகியவற்றுக்கு உரிய அமைப்பு அல்ல . மலையாளம் உருவான காலகட்டத்து தமிழ் பண்பட்ட ஒரு செவ்வியல்மொழி .ஆனால் பழைய மலையாளமோ செம்மையற்ற ஒரு பழங்குடி மொழி. செம்மொழி ஒன்றிலிருந்து பண்படாமொழி உருவாக வாய்ப்பில்லை. ஆகவே அராபியரும் ஐரோப்பியரும் வரும்வரை கேரள நிலப்பரப்பில் இருந்தது ஒருவகை அரைப்பழங்குடி வாழ்க்கை. தமிழின் உறுப்பாக இருந்த பண்படாத ஒரு மொழி வடிவம். சேரநாடு என்பது இரண்டு. முதல் சேரநாடு இன்றைய கொங்குநாடு . பிற்கால சேரநாடு தென்தமிழ்நாடான திருக்கணங்குடி, தென்காசி பகுதிகள். இத்தகைய பழங்குடிச் சமூகத்தில்தான் பிராமணர் முழுமையான ஊடுருவலை நிகழ்த்தமுடியும். அதுவே நிகழ்ந்தது என்கிறார் பி கெ பாலகிருஷ்ணன்.

இன்றைய வரலாற்றாசிரியர்களின்  கேரள வரலாற்று உருவகத்தை நாம் இந்த இரு எல்லைகளுக்குள் ஏதோ ஒரு புள்ளியில் வைத்து வகுத்துக் கொள்ளலாம். எம் ஜி எஸ் நாராயணன் போன்ற கல்வித்துறை அறிஞர்கள் இளங்குளம் குஞ்ஞன் பிள்ளையை ஒட்டி நிற்பவர்கள்.ஆனால் கேரளத்தின் பழங்குடித்தன்மை பற்றிய ஒரு கவனம் அவர்களுக்கு உண்டு . இ எம் எஸ் அவர்களின் வரலாற்று உருவகம் பெரிதும் இளங்குளம் குஞ்ஞன் பிள்ளையை ஒட்டியதாக துவங்கினாலும் அவர்கொண்ட மார்க்ஸிய ஆய்வுமுறை அவரை மெல்ல நகர்த்தி பாலகிருஷ்ணனின் முடிவுகளுக்கு முன்னோடியாக ஆக்கியது .
இ எம் எஸ்ஸின் வரலாற்றாய்வுகளின் சூழல்
=================================

இ எம் எஸ் கேரள வரலாற்றைப்பற்றிய தன்னுடைய ஆய்வை துவக்குவது 1930களில் .அப்போது இந்திய வரலாற்றாய்வே குழந்தைநிலையில் தான் இருந்தது . இந்திய வரலாறு குறித்து வெள்ளையரால் உருவாக்கப்பட்ட ஏகாதிபத்திய சித்திரம் ஒன்று பிரபலப் போக்காக இருந்தது.பதற்கு எதிரான குரலாக இந்திய பெருந்தேசிய நோக்கிலான வரலாற்றாய்வுகள் சூடுபிடித்திருந்தன. தமிழ்நாடு போன்ற சில பகுதிகளில் மட்டுமே மாற்று தேசியங்கள் குறித்த ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருந்தன. பிராந்தியக் கலாச்சார ஓட்டங்களைப்பொறுத்தவரை அவற்றை இன அடிப்படையில் பகுத்து வகுக்கும் போகே மேலோங்கியிருந்தது .ஆரிய– திராவிடவாதத்தின் வீச்சில் அகப்படாத வரலாற்றாசிரியர் குறைவே.இ எம் எஸ் அவர்கள் கேரள வரலாற்று ஆய்வுகளை தொடங்கும்போது கேரளத்தில் வரலாற்று ஆய்வு துவக்க நிலையிலேயே இருந்தது. பண்டைத்தமிழகம் குறித்த ஆய்வுகள் அப்போதுதான் வர ஆரம்பித்திருந்தன. பலநூல்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் கிடையாது .மலையாள மொழிபெயர்ப்புகளைப்பற்றி யோசிக்கும் காலமே எழவில்லை. கேரள வரலாற்றின் முக்கியமான கல்வெட்டுகள் , செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் படிக்கப்பட்டு விவாதங்கள் துவக்கப்படவில்லை புராணத் தகவல்களை அபத்தமாக வரலாற்றுக்குள் பிரயோகிக்கும் போக்கு வலுவாக இருந்தது. திருவிதாங்கூர் அரசு வலுவான ஒரு சக்தியாக இருந்தது, அதற்கு நவீன கல்வி விஷயங்களில் மிகுந்த ஆர்வமிருந்தது. ஏற்கனவே பாச்சு மூத்தது போன்ற பண்டைய மரபுசார் சரித்திர ஆசிரியர்கள் திருவிதாங்கூர் வரலாற்றை ஐதீகங்களையும் மன்னர்புகழ்பாடல்களையும் கலந்து  ஒரு முன்வரைவாக உருவாக்கியிருந்தனர். அதை ஒட்டி சங்குண்ணி மேனன், சதஸ்ய திலகன் வேலுப்பிள்ளை முதலியோரின் திருவிதாங்கூர் வரலாறுகள் வந்தன. இவ்வரலாறுகள் உருவாக்கிய அடிப்படைகள் வரலாற்றாய்வையே தீர்மானித்தன. ராஜபக்தி வரலாற்றின் அடிப்படைகளில் ஒன்றாக இருந்தது . திருவிதாங்கூர் பழைமையும் பெருமையும் மிக்க ஒரு இந்திய அரசு என்ற சித்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. அதையொட்டி நாயர்  ,நம்பூதிரிகள் ஆகியோரின்  குலப்பெருமை வரலாறும் கற்பிதம் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு மறுபக்கமாக கேரள வரலாற்றை அறிய மிகுந்த துணையாக ஐரோப்பியர் ஆவணங்கள் இருந்தன. பர்போசா ,ஹெர்மன் குண்டர்ட் , போன்றவர்களின் குறிப்புகள் லோகனி¢ன் மலபார் மானுவல்  ,வார்ட் அண்ட் கானர் உருவாக்கிய திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவல் போன்ற முக்கிய ஆவணங்கள் பெரும் தகவல் குவியல்களைக இருந்தன. அவை காட்டும் கேரள சித்திரம் முற்றிலும் மாறான ஒன்றாக இருந்தது. அதேபோல இக்காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் சங்க இலக்கியங்கள் வரலாற்றாய்வுக்கு பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டின் பண்டைய வரலாறு குறித்த ஒரு முன்வரைவு உருவாக்கப்பட்டது. அது அன்று கேரளத்துடன் ஆழமான தொடர்பு கொண்டிருந்த எஸ். வையாபுரிப்பிள்ளை , மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலியோர் வழியாக அங்கு ஆழமான பாதிப்பையும் ஏற்படுத்தியது.

ஆக வரலாற்றாசிரியர்கள் முன் இருந்த பெரிய சவால்கள் மூன்று. ஒன்று ,பண்டைய தமிழக வரலாற்றின் ஒரு பகுதியாக கேரள வரலாற்றை விளக்குவது. எந்தெந்த கூறுகள் தொடர்ச்சி கொண்டுள்ளன, எவை கேரளத்துக்கே உரிய தனித்தன்மைகள் என்று காட்டுவது. இரண்டு,  கேரள அரசுகளின் உண்மையான வரலாற்றை உருவாக்குவது. மூன்று , கேரளத்துக்கே உரிய மருமக்கள்த்தாயம், நம்பூதிரி மண உறவுகள் போன்ற சமூகவியல் தரவுகளின் அடிப்படையில் கேரள வரலாற்றைச் சித்தரிப்பது. பேரா இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை போன்றவர்கள் முதல் கேள்விக்கு அழுத்தம் அளித்தார்கள் . எஸ்.பத்மநாப மேனோன் * போன்றவர்கள் இரண்டாம் கேள்விக்கு. இ எம் எஸின் பங்களிப்பு மூன்றாம் தளத்திலாகும். இந்த தளத்தில் அவருக்கு முன்னோடிகள் அதிகமில்லை. நாராயண குருவின் சீடரான கௌமுதி குஞ்ஞிராமன் ஒரு அடிப்படை முன்வரைவை உருவாக்கினார் எனலாம்.

இ எம் எஸ் முழுநேர வரலாற்றாசிரியரல்ல. பதினெட்டு வயதில் திரிச்சூர் வேத பாடசாலையில் இருந்து பூணூலை அறுத்துவீசி சமூகப் பணிக்காக இறங்கிய காலம் முதல் நடக்க முடியாத முதுமை வரை ஓய்வே அறியாத களப்பணியாளராக வழ்ந்தவர் அவர் . அவரது வரலாற்றாய்வு நிகழ்ந்த காலகட்டத்தில் இந்திய அரசியல் கொந்தளித்துக் கொண்டிருந்தது . கம்யூனிஸ்டு கட்சி குழந்தை நிலையிலிருந்தது. விவசாய அடிமைகளைன தலித்துக்கள் விஷயத்தில் கம்யூனிஸ்டு கட்சி நேரடி நடவடிக்கைகளில் இறங்கி கொடிய அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருந்தது . இ எம் எஸ்ஸின் மாபெரும் வரலாற்று நூலான ‘க்  எழுதப்படும்போது அவர் பெரும்பாலும் நாட்கள் தலைமறைவு வாழ்க்கையில்தான் இருந்தார் . ஆகவே தரவுகளை திரட்டுவதில் அவருக்கு நிறைய சிரமங்கள் இருந்தன. அவரது தமிழ் அறிவு குறைவானதே. ஆகவே அவரது ஆய்வுகள் இரு சாதகவிஷயங்களை  அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டவை. ஒன்று அவருடைய பொதுவான பாண்டித்தியம் மற்றும் அவர் கைக்கொண்ட மார்க்ஸிய ஆய்வுமுறை . இன்னொன்று அவருக்கு கேரள சமூக வாழ்வில் இருந்த நேரடியான அறிமுகம் ,அதிலிருந்து அவர் பெற்ற உள்ளுணர்வு. இவற்றை இன்றும் பெரு மதிப்புடனேயே பார்க்க முடிகிறது. இ எம் எஸ்ஸின் நூல்கள் பல தலங்களில் விமரிசிக்கப்பட்டுள்ளன. அவை பழம் பெருமைகளை குலைப்பவை,கேரள ஆத்க்க சக்தியான நாயர்கள் உருவாக்கும் வரலாற்றுக் கற்பிதங்களை அவை ஏற்பதில்லை    என்பது ஒரு முக்கிய காரணம்.  . ஆனாலும் இன்று வாசிக்கும் போதுஅவரது ஆய்வுகள் ஆய்வுமுறைமை கூடியவையாகவும் , அவரது முடிவுகள் மறுக்கப்படாதவையாகவும் உள்ளன. அவரது வரலாற்று பார்வையே ஆகப்பொருத்தம் உள்ளதாக காணப்படுகிறது. பி கெ பால கிருஷ்ணன் அவரது தொடர்ச்சி .

 

[தொடரும்]

முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம் 11, பிலம்
அடுத்த கட்டுரைஆஸி கடிதங்கள்