ஜெ
ஒரு விஷயம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் பேரில் ஃபேஸ்புக் தளம் உள்ளதா? Jeyamohan Balayan என்றபேரில் உங்கள் படத்துடன் ஒரு ஃபேஸ்புக் தளம் உள்ளதே
ஜேக்கப் ராய் ஆப்ரஹாம்
அன்புள்ள ஜேக்கப்
அது ஒரு மோசடித் தளம். நான் ஃபேஸ்புக் உறுப்பினர் அல்ல. எந்த சமூக வலைத்தளத்திலும் நான் உறுப்பினர் அல்ல.
அந்த அசடு என் அப்பா பேரைக் குத்துமதிப்பாகப் போட்டது இன்னும் கண்டிக்கத்தக்கது
இன்னும் ஒரு விஷயம். நான் எந்த இணையதளத்திலும் பின்னூட்டம் போடுவதில்லை. ஜெயமோகன் என்றபேரில் போடப்படும் எந்தப்பின்னூட்டமும் என்னுடையதல்ல.
எப்படியெல்லாம் ஜாக்ரதையாக இருக்கவேண்டியிருக்கிறது
ஜெ