இரு இணையதளங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

உங்கள் வலைத்தளத்தை நீண்ட நாளாக வாசித்து வருகிறேன். மிகவும் நன்றாக நடத்தி வருகிறீர்கள். எனக்கும் தமிழில் நல்ல வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாளைய ஆசை.

இந்த ஆசையை நிறைவேற்றும்படி, சில வருடங்களுக்கு முன் திருக்குறள் (http://www.thirukkural.com) என்ற இணைய தளத்தைத் துவங்கினேன். அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, இந்த வருடம் சிறுகதைகள் (http://www.sirukathaigal.com) என்ற இணைய தளத்தை துவங்கி உள்ளேன். இத்தளத்தில் உங்கள் சிறுகதைகளையும் சேர்த்து உள்ளேன். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

இந்த இருதளமும் லாப நோக்குடனும் நடத்தவில்லை. நீங்கள் இந்த இரு தளத்தையும் பார்வை இடுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
கார்த்திக்

முந்தைய கட்டுரைகதைகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைதூக்கம் – கடிதம்