பாண்டிச்சேரியில் காந்தி உரை – ஏப்ரல் 9

மின்னியல் மற்றும் தொடர்பியலுக்கான பொறியியல் துறை

புதுச்சேரி பொறியியல் கல்லூரி, புதுச்சேரி – 605 014

 

நிகழும் கல்வியாண்டில் பொறியியல் இறுதியாண்டுப் படிப்பை முடித்துக்கொண்டு விடைபெறும் மாணவ, மாணவிகளிடம் மேன்மையான சமூகத்துக்கான விழைவையும் அவற்றைச் சாத்தியப்படுத்தத் தூண்டும் கனவுகளையும் உத்வேகத்தையும் ஊட்டத்தக்க அளவில் மன எழுச்சியையும் நல்லுணர்வையும் வழங்கக்கூடிய ஒரு பேருரைக்கான ஏற்பாட்டை நமது மின்னியல் மற்றும் தொடர்பியலுக்கான பொறியியல் துறை செய்துள்ளது.

தமிழ் எழுத்துலகில் தனித்துவத்துடன் தொடர்ந்து எழுதிவரும் மிகமுக்கியமான படைப்பாளியான திரு.ஜெயமோகன் ”காந்தியின் மகத்துவம் மிகுந்த வாழ்வும் நிகழ்கால இளந்தலைமுறையினருக்கான அவருடைய செய்தியும்” என்கிற தலைப்பில் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் நாள் பகல் 2.30 மணியளவில் நமது துறையின் கருத்தரங்கக் கூடத்தில் உரை நிகழ்த்த உள்ளார் என்பதை எல்லா மாணவ மாணவிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம். நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவரையும் வருக வருக என உளமார அழைக்கிறோம்

 

அன்புடன்

துறைத்தலைவர்

இது அனைவரும் கலந்துகொள்வதற்கான பொது நிகழ்வு , அனைவரையும் வரவேற்கிறோம் .

முந்தைய கட்டுரைவாசலில்…
அடுத்த கட்டுரைகுவைத் நிகழ்ச்சி நிரல்