ஐயாறப்பனை அழிப்பது – கடிதம்

அன்புள்ள நண்பர் ஜெயமோஹன் அவர்களுக்கு,

வணக்கம். திரு. ஏ.வி.மணிகண்டன் தங்களது வலைத்தளத்தில் ஐயாறப்பன் கோவில் புனரமைப்பைப் பற்றிய ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து எத்தனையோ அந்தக் கோவில் ஆதீனத்திடம் கூறியும் அவர் தொடர்ந்து புராதனத் தன்மையைக் குழிதோண்டிப் புதைத்து வருகிறார். இது குறித்த என் கட்டுரை வல்லமை.காமில் இதோ:

http://www.vallamai.com/literature/articles/14714/

அதிலேயே flickr link படங்களும் உள்ளது. நல்ல பணம் மட்டும் சம்பாதிப்பதில் குறியாக இல்லாமல், நம் கலாச்சாரத்தில் அக்கறையுள்ளவராய் வக்கீல் எவரேனும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் கூறுங்கள். அவருக்காக எந்தக் கூண்டில் ஏறியும் இவர்கள் செய்யும் பாதகச் செயல்களுக்காகச் சாட்சி சொல்லத் தயார்.

உங்கள் வலைக் கட்டுரையில் பின்னூட்டங்கள் இட இயலாததால், இந்தத் தனிமடல். தொந்தரவு செய்யவில்லை என்று நினைக்கிறேன். பாரம்பரியப் பொக்கிஷங்கள் மேல் தாங்கள் தொடர்ந்து காட்டிவரும் அக்கறை நெகிழ வைக்கிறது. ஊர் கூடித் தேர் இழுத்தால், தேர் நகராமலா போகும்.
அன்புடன்,

j. chandrasekaran

P.R.O, REACH FOUNDATION

visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com

join our yahoo groups to know all happenings in heritage issues…

http://groups.yahoo.com/group/temple_cleaners/join

 

ஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு..

முந்தைய கட்டுரைமானுட ஞானம் தேக்கமுறுகிறதா? – கடிதம்
அடுத்த கட்டுரைகயாவும் இந்துக்களும்