குப்பத்துமொழி

அன்புள்ள ஜயமோகன்
 
குப்பத்துமொழி கட்டுரையில் “சென்னை வழக்கு என்பதன் ஊற்றுக்கண் என்பது பாண்டிச்சேரி கடலூர் பகுதியின் பேச்சுமொழிதான்” என்கிறீர்கள்.
 

மெல்ராஸ் பாஷைக்கு ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். சென்னை தொண்டைமண்டலத்தின் ஒரு பகுதிதானே. சரித்திர காலத்தில் சென்னை பிரதெசம் காஞ்சி-செங்கல்பட்டு ஆதிக்கத்தில் இருந்தது. தொண்டை மண்டலம் சில தென் ஆந்திர மாவட்டங்களையும் உள்கொண்டிருந்தது.  உதாரணமாக மாம்பலம் இன்னும் பழைய ரெகார்டுகளில் புலியூர் என அழைக்கப் படுகிரது. புலியூர் தொண்டை மண்டலத்தின் ஒரு நாடு ஆகும்.  பழைய கால ‘நாடு’ தற்கால நாடுகளிலிருந்து பொருள் வேறுபடுகிறது.மேலும் பல்லாவரம், சைதை, திருவல்லிக்கேணி, புரசவாக்கம், திருமழிசை போன்றவை பல்லவ காலத்திலிருந்து வருபவை. சென்னையின் அடித்தள மக்கள் செங்கல்பட்டு டிஸ்ட்ரிக்டை சேர்ந்தவர்கள். தற்போது சென்னையின் புறநகர் வளர்வு மெதுவாக பழைய செங்கல்பட்டை தின்று வருகிறது. இலக்கணத்திலும், சொல்லாடல்களிலும் சென்னை தமிழும் செங்கல்பட்டு-காஞ்சீபுரத்தை சார்ந்ததாகும். அதற்கு மேல் மக்கள் மொழியில் தெலுங்கு, உருது, ஆங்கிலம், போர்சுகீஸ், சமஸ்கிருதம் முதலிய மொழிகளிலிருந்து பல வார்த்தைகள் கடன் வாங்கப் பட்டுள்ளன
 
 
 
இன்னும் 50 வருடங்களில் சென்னையின் மக்கள், தொழில் வளர்சியினால் சென்னை-காஞ்சீபுரம் ஒரு ஒன்றான  population conurbation ஆகும்.
 
 
 
மதிப்புடன்
 
வன்பாக்கம் விஜயராகவன்

 

 

அன்புள்ள ஜயமோகன்
 
சென்னை தமிழ் செங்கல்பட்டு-காஞ்சி மண்டலத்தை சார்ந்தது என்பதற்க்கு இன்னும் தெரிந்த உதாரணங்கள் – ஊர்பெயர்கள். இங்குதான் கிராம பெயர்கள் ‘பாக்கத்தில்’ முடியும். சென்னையில் உள்ள பழைய ஊர் பெயர்கள் பல  பாக்கத்தில் முடிபவை : நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம்,கோடம்பாக்கம்,  கேளம்பாக்கம், அரும்பாக்கம், புரசவாக்கம், கத்திவாக்கம், புழுதிவாக்கம், . நீங்கள் தொண்டை மண்டலத்திற்கு வெளியே பாக்கத்தை பார்க்க முடியாது. பாண்டிசேரி சென்னையிலிருந்து 100 மயிலில் இருந்தாலும், பாண்டிக்கு அருகே ஒரு பாக்கமும் இல்லை.
 

மதிப்புடன்
 
வன்பாக்கம் விஜயராகவன்
பிகு: என் பரம்பரை கிராமம் சென்னைக்கு அருகே உள்ளது.

 

 

ங்கோத்தா”-வுக்கு உவத்தலை மூலமாக காட்டியிருக்கிறீர்கள். அது இப்போதெல்லாம் ஏறக்குறைய ‘ஓத்தா..’ என்றே ஒலிப்பதால் கூட இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.

ஆனால் அதன் திரிபு (மரூ?) இன்னும் எளிமையானது என்றே நினைக்கிறேன்.

உங்க ஆத்தாள ஓக்க..என்பதிலிருந்து ங்கோத்தாள..(அப்புறம் நடுவிரலை மட்டும் மடித்து அசைக்கும் சைகை) என்று சுருங்கி ங்கோத்தா..வோத்தா..வில் வந்து நிற்கிறது.

நீங்கள் சரியாகச் சொன்னது போலவே இதுவும் விலக்கப்பட்ட, தாயைப் புணர்வதை குறிக்கும் வசையிலிருந்தே பிறக்கிறது.

தமிழ்ச்சொல்லாய்வாளர்களை நீங்கள் சமயம் வாய்க்கும் போதெல்லாம் கிண்டலடிப்பது இப்போது நினைவு வருகிறது. ங்கோத்தாளுக்கு உவத்தலைக் கண்டுபிடித்திருப்பதுவும் ஏறக்குறைய அதேதான்.

நீங்கள் உடைத்தால் மட்டும் வெறும் மண் குடமாக்கும்?

 

சண்முகவேல் ராமச்சந்திர்ன்

அன்புள்ள ராமச்சந்திரன்

நீங்கள் தான் சென்னை கலைச்சொல்லை சற்று தவறாக புரிந்குகொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். எப்படியானாலும் தங்கள் விமரிசனத்துக்கு நன்றி.மாமியாரும் அவ்வப்போது உடைக்கவேண்டுமே
ஜெ

முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம்,7- கலிபோலி
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம் 8, கலைக்கூடம்