மாடு – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

மாடல்ல மற்றையவை  கட்டுரையை நீங்கள் நகைச்சுவைப் பகுதியில் சேர்த்திருக்கிறீர்கள். நானென்னவோ கண்கள் பனிக்கக் கட்டுரையைப் படித்து உணர்ச்சி வசப்பட்டேன். இதில் சோற்றுக்கணக்கு, யானைடாக்டர், கோட்டி போன்ற கதைகளின் சாரம் இருக்கிறது. விவசாயிகளின் நிலை இதைவிட அதிக ‘நகைச்சுவையுடன்’ உள்ளது. என்அப்பா விவசாயம் பார்க்கிறார். என்னிடம் பணம் எதுவும் கேட்பதில்லை. அதற்கு அவருடைய ஆசிரியர் வேலையின் ஓய்வூதியம் உள்ளது. மனதைத் தொடும் கட்டுரையைக் கொடுத்ததற்கு நன்றி.

அன்புடன்
த. துரைவேல்.

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலந்தானே?

விடியற்காலையில் இப்படி நான் சிரித்ததே இல்லை. தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மக்கள் எல்லாம் எழுந்து விட்டார்கள். விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருந்தேன். பால்காரன் இறுதியில் சொன்ன ‘punch dialogue’ அருமையிலும் அருமை. இயல்பான அங்கதம் படித்து வெகு நாட்களாயிற்று.

அன்புடன்

இளம்பரிதி

முந்தைய கட்டுரைஅஞ்சலி-மனோகர்
அடுத்த கட்டுரைபுதிய பிரபஞ்சம் பற்றி