மானுடம் வெல்லும், வானம் வசப்படும்

ஆனந்தரங்கம் பிள்ளை 

தினப்படி சேதிக்குறிப்பு

ஜெமோ,

பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாடமி விருது ‘வானம் வசப்படும்’ என்ற நாவலுக்குத்தான் கிடைத்தது. மானுடம் வெல்லும் நாவல்தான் பாண்டிச்சேரி ஆனந்தரங்கனார் டைரிக் குறிப்புக்களை ஒட்டி எழுதப்பட்டது. தகவல் சரிபார்த்துவிட்டு எழுதவும்.

இப்போது திடீரென்று மானுடம் வெல்லும் உசந்த நாவல் என்று சொல்கிறீர்கள். இதற்கு முன்னர் எங்காவது சொன்னதுண்டா?

சாமி

அன்புள்ள சாமி,

பிழைதிருத்தத்துக்கு நன்றி. திருத்திவிடுகிறேன்.

மானுடம் வெல்லும் நாவலின் இரண்டாம் பகுதிதான் வானம் வசப்படும். அதுவும் ஆனந்தரங்கம்பிள்ளை குறிப்புகளை ஒட்டி எழுதப்பட்டதே.

மானுடம் வெல்லும் பற்றி என்னுடைய ‘நாவல்’ நூலில் 1992 லேயே எழுதியிருக்கிறேன். பிறகும் பல இடங்களில் எழுதியிருக்கிறேன். மானுடம் வெல்லும் தமிழின் முதல் வரலாற்றுநாவல் என்பது என் எண்ணம்.

மானுடம் வெல்லும் வெளிவந்தபோது அது ஆனந்தரங்கம் பிள்ளை குறிப்புகளின் ‘காப்பி’ என ஒரு பேச்சு எழுந்தது. ஆகவே தர்மபுரியில் 1992இல் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்தேன். அதில் பிரபஞ்சனை வரவழைத்துப் பேசவைத்து கௌரவித்தேன்.

வரலாற்றெழுத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவைப்பற்றி நான் அப்போது பேசிய உரையும் பிரசுரமாகியிருக்கிறது. அதே கருத்தையே இப்போதும் சொல்கிறேன்.

ஜெ

பிரபஞ்சனின் மானுடம்வெல்லும் சிலிகான் ஷெல்ஃப்

முந்தைய கட்டுரைகாவல்கோட்டமும் தோழர்களும்
அடுத்த கட்டுரைஅழகு-ஒருகடிதம்