இணையத்தில் தேடும்போது தற்செயலாக சித்தார்த் எழுதிய இந்தக் கதையை வாசித்தேன். நான் எழுதிய அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு கதையை ஒட்டி எழுதப்பட்ட கதை.
இலக்கியம் அல்லது சிந்தனை என்பது எதிர்காலத்தில் என்னவாக இருக்கும் என்பது ஓர் அடிப்படைக் கேள்வி. அதன் சாத்தியங்கள் எண்ணற்றவை. சிந்தனை என்பது புறவாழ்க்கையின் சாரம் என்பதனால் ஒட்டு மொத்த புறவாழ்க்கை மாற்றங்களையே அதைக்கொண்டு சொல்ல, ஊகிக்க வைக்க முடியும்.
சித்தார்த்தின் இக்கதை என்னை மிகவும் கவர்ந்தது.