பஷீர்-இரா.முருகன்– கடிதம்

பஷீர் விக்கி

அன்புள்ள ஜெயமோகன், சுகுமாரன்

பஷீர் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரின் கட்டுரை ஒன்றை அண்மையில் படித்திருக்கக் கூடும். ‘.ன்றெப்பூப்பர்க்கோரானயுண்டாய்ர்ர்னு.’ கதையில்
வரும் குழியானைக்கு ஆங்கிலம் தேடியதைக் குறிப்பிட்டிருப்பார் அவர். பஷீர்  தன் கதை மொழிபெயர்த்து வந்த எழுத்துப் பிரதியின் மார்ஜினில் சில  திருத்தங்களை ஒருமுறை செய்தார் என்றும் அவை மலையாள மூலத்தில் இல்லாமல்  புதிதாக இடம் பெற்றவை என்றும் மொழிபெயர்ப்பாளர் சொல்கிறார். இது
இயல்பானது என்றே தோன்றுகிறது.

ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கும் அவசரத்தில், நல்ல
மொழிபெயர்ப்புகளில் கூட சில சமயம் தவறுகள் தட்டுப்பட் வாய்ப்புள்ளது.
உதாரணமாக ஒரு பஷீர் கதையில்

மலையாளம் – ‘அவன் தாமுவினு மதுரப் பலஹாரங்ங்ள் கொண்டு வந்நு தன்னு

ஆங்கிலத்தில் – He brought sweetmeats for Dhamu

தமிழில் – அவன் தாமுவுக்கு இனிப்பு மாமிசம் கொண்டுவந்து கொடுத்தான்.

அன்புடன்
இரா.முருகன்

அன்புள்ள இரா முருகன்

இதைச் சொல்கிறீர்க்ள். சத்யஜித் ரேயின் ஒரு படம். அபுர் சன்ஸார். தமிழாக்க முதல் வரி . அப்பு ஆசிரியரிடமிருந்து விடைபெறுகிறார்.”நல்லது, அப்போது நான் என் பாதையில் உள்ளேன் ஐயா”

மூலம்

“Well,now, I am on my way sir”

இதேபோல தமிழ் படைப்புகளின் ஆங்கில ஆக்கத்திலும் குப்புசாமி கண்ணம்மாவைப் பார்த்து ‘ ஹாட்ஸ் ஆ·ப் ‘என்று சொல்கிற காட்சிகளைக் காணலாம்.

அதையெல்லாம் மீறி இங்கே பஷீர் பலருடனும் உரையாடியிருப்பது ஆச்சரியமூட்டும் விஷயமே

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபஷீர்- கவிஞர் சுகுமாரன் கடிதம்
அடுத்த கட்டுரைமொழிபெயர்ப்பு-ஜெயந்தி சங்கர் கடிதம்