” கணவனுக்காகக்கூட முத்துமீனாள் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை
அந்த தன்ன்னம்பிக்கைதான் இத்தனை துயரம் மிக்க வாழ்க்கையில் வழியாக கைவிளக்காக ஒளிகாட்டி அவரை இட்டுவந்திருக்கிறது//
அருமையான தன் வரலாற்றை வெளிக்கொண்டு வந்ததுக்கு நன்றி. பெண்களுக்கு இத்தகைய துணிவு வேண்டும். இதைத் தான் பாரதி, “ரெளத்திரம் பழகு” என்று சொல்லி இருப்பாரோ எனத் தோன்றுகிறது. திமிர்ந்த ஞானச் செருக்கும் இது
கீதா சாம்பசிவம்
அன்புள்ள ஜெயமோகன்,
முத்துமீனாள் அவர்களது வரலாறு நெகிழ்ச்சியூட்டுவதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது. எந்த நிலையிலும் தன் சுயம் என்னும் சுடர் அணைந்து விடாமல் காத்து வந்திருக்கும் அவரது மன உறுதி போற்றுதலுக்குரியது, பவுத்த அய்யனார் கவிதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். அவரது நடைமுறைச் செயல்பாடுகள் பற்றி அறிந்து அவர்மீது உள்ள மதிப்பு மேலும் உயர்கிறது.
ஊடகள் வெளிச்சங்களூக்குள் வராத இத்தகைய உயர்ந்த மனிதர்களையும், அவர்களது கருத்துக்களையும் வாசகர்களுக்கு தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வரும் தங்கள் பணி மகத்தானது.
அன்புடன்,
ஜடாயு
அன்புடன்
O Block, Ganapathy Colony,
Anna Nagar East,
Chennai 600102
0-99401 47473
044-26222939
அன்புள்ள ஜெ,
முள் நூலைப்பற்றிய கட்டுரை மனதைக் கவர்ந்தது. நீங்கள் சுயசரிதைகளில் இருந்து எடுத்து எழுதிவரும் எல்லா பகுதிகளுக்கும் ஒரு பொது அம்சம் காணப்படுகிறது. அவையெல்லாமே நேர்மையான பதிவுகளாக இருக்கின்றன. நேர்மையானமுறையில் எழுதப்படக்கூடிய வாழ்க்கை என்பது எப்போதுமே மனதை தூண்டுவதாக உள்ளது என்று அவை காட்டுகின்றன
வாழ்த்துக்கள்
சிவம்
சென்னை