சாப்டாச்சா?”ஒருகடிதம்

அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு , 

கடந்த சில மாதங்களாக உங்களின் வலை பதிவை மிகவும் ரசித்து படித்து வருகிறேன். தங்களின் “அள்ளிப் பதுக்கும் பண்பாடு” படித்தேன். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே. நானும் எனது நண்பர்களும் இதை பற்றியே நினைப்பதுண்டு. அதுவும் அமெரிக்கா வந்த பிறகு ச்பஷ்டமாகவே இந்த வேறுபாடுகள் தெரிகிறது. விவேகனந்தர் கூட இதை  பல இடங்களில் சொல்லி இருக்கிறார் என அறிந்திருப்பீர்கள். பின் வருவது அவரின் ஒரு கடிதத்திலிருந்து

“The Chinese child is quite a philosopher and calmly goes to work at an age when your Indian boy can hardly crawl on all fours. He has learnt the philosophy of necessity too well. Their extreme poverty is one of the causes why the Chinese and the Indians have remained in a state of mummified civilisation. To an ordinary Hindu or Chinese, everyday necessity is too hideous to allow him to think of anything else.”

ஆனால் நீங்கள் கூறும் “சாப்டாச்சா” கொஞ்சம் மிகை படுத்தப்பட்டது போல் உள்ளது.  “சாப்டாச்சா” நமது போற்றப்பட்ட விருந்தோம்பலின் பண்பல்லவா? நான் கொஞ்சம் படித்த நமது புராணங்களிலும், மகாபாரதத்திலும் யார் வந்தாலும் முதல்ல சாப்ட தான சொல்றாங்க?  அதிலும் ரிஷிகளுக்கு கோவம் வருவதே இதை செரியா செய்யாட்டி தான சார்?

அப்பறம் நீங்கள் கமெண்ட்ஸ் அனுமதிக்க கூடாது? இதே போன்ற எண்ணம் கொண்ட உங்களின் வாசகர்களுக்கு உரையாட ஒரு தளமாக அமையும் அல்லவா?

மதிப்புடன்,
ராஜ்

 

 

உங்கள் வஅன்புள்ள ராஜ்குமார்

ஏற்கனவே சொன்னதுதான், வரும் கடிதங்களில் வசைகள் மிக அதிகம். இப்போது பலவகையான கருத்துப்பிரச்சார அஞ்சல்கள் அதிகம். அவற்றை பிரசுரித்தால் இணையமே கனத்து அசைவிழந்துவிடும். அவற்றை நீக்குவது பெரியவேலை. இப்போதுள்ள கடித அமைப்பு பலவகையில் உதவியாக இருக்கிறது. முதன்மையாக ஒரு கட்டுரை புதைந்துபோய்விடாமல் அது காக்கிறது– நினைவூட்டுகிறது.

*

சாப்ட்டாச்சா என்ற கேள்வி நம் புராணங்களில் இல்லை. அது நம் நாடகங்கள் வழியாக பிற்காலத்து நூல்களில் இடம்பெற்ற ஒன்று. அன்று ஒரு ரிஷி வந்தால் 16 உபச்சாரங்கள் செய்வார்கள். அவை ஷோடஸ உபச்சாரம் என்று சொல்லபப்ட்டது. முகமன், அமர இடம் தருதல், இளைப்பாற விசிறுதல் என பதினாறு படிகள் அங்கே இருந்தன. . இன்றும் நம் ஆலயங்களில் இறைவனுக்கு அந்த பதினாறு உபச்சாரங்களும் முறையாகச் செய்யப்படுகின்றன. பதினாரும் என்ன  என்பதற்கு அபிதான சிந்தாமணியைப் பார்க்கவும்

அதில் முதன்மையாக இருப்பது முகமந்தான். முகமன் சொல்லுதல் என்றால் மேலோட்டமான வாழ்த்து அல்ல. வந்தவரின் தகுதி சிறப்பு ஆகியவற்றை அறிந்து உகந்த முறையில் சொல்லப்படும் இன்சொல்லாகும். அதில் தகாத பொருள் வரும் சொற்கள் தவறிப்போய்க்கூட வரக்கூடாது என்ற மரபு இருந்தது. உங்கள் நோயெல்லாம் அழிக என்று சொல்லக் கூடாது— அதில் உள்ள அழிக என்ற சொல் அமங்கலமானது என்பதனால்

இந்த முகமன் தான் பின்னாளில் சாப்பிட்டாச்சா என்று ஆகியது. காரணம் சோற்றுப்பஞ்சம் என்று நான் ஊகிக்கிறேன்.
ஜெ

முந்தைய கட்டுரைபயணம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைமுள்:கடிதங்கள்