திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் அருகர்களின் பாதை பயணக்கட்டுரைகள் தினமும் படித்து வருகிறேன். ஏன் உங்கள் பயணத்தில் தமிழ்நாட்டை விட்டு விட்டீர்கள்?

சமீபத்தில் சென்று வந்த திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

திருப்பான்மலை, ஆற்காட்டில் இருந்து தென்கிழக்காக 7 கி மீ தொலைவில் இருக்கும் ஒரு பாறைக்குன்று ஆகும். இதைப் பஞ்சபாண்டவர் மலை என்றும் அழைக்கிறார்கள். மலைக்குக் கீழே உள்ள குடைவரையில் ஏழு அறைகள் காணப்படுகின்றன. குடைவறைக்கு மேலே தேய்ந்த நிலையில் ஒரு சமண உருவம் காணப்படுகிறது. மலை மேலே ஒரு குகையும், ஒரு தர்காவும் உள்ளன. குகைக்குள் சிதைந்த நிலையில் இரண்டு கற்படுக்கைகள் காணப்படுகின்றன. அதற்கு அருகில் சுனை ஒன்றும் காணப்படுகிறது. சுனை ஓரத்தில் ஒரு பெண் சிற்பம் இருக்கிறது. இது சமணர்கள் வணங்கும் இயக்கியின் சிற்பம் ஆகும் (இந்தப் பெண்ணைத் தயிர்க்காரி என்றும், பஞ்ச பாண்டவர்களுக்குத் தயிர் விற்றவள் என்றும் கிராம மக்கள் கூறுகிறார்கள்). இந்த சிற்பத்திற்கு வலப்பக்கத்தில் சாமரம் வீசும் ஒரு ஆணின் உருவமும், சிற்பத்திற்குக் கீழே ஒரு ஆணின் உருவமும் குதிரையுடன் கூடிய வீரன் ஒருவனின் உருவமும் ஒரு பெண்ணின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது . கி பி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகளும் ஒரு சிறிய சமண உருவமும், சிங்கம் சிற்பமும் குகைக்கு பக்கவாட்டில் வெளியே காணப்படுகின்றன. ஆர்வமூட்டும் செய்தி என்னவெனில், மலைக்கு அருகில் இருக்கும் ஊர்மக்களுக்கு இந்த தர்கா ஒரு முக்கிய வழிபாட்டுத்தலம். ஊர் திருவிழா, கல்யாணம் போன்ற அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளுக்கும், முதலில் இங்கு வழிபாடு நடத்திய பிறகே ஆரம்பிக்கிறார்கள். இதற்கு ‘பயித்தம் பண்ணுதல்’ என்று சொல்கிறார்கள். இந்த தர்காவை ‘ஷமா’ என்ற இஸ்லாமியப் பெண்மணி பார்த்துக் கொள்கிறார்.

ஊரணித்தாங்கல் செஞ்சியில் இருந்து கிழக்காக இரண்டு கி மீ தொலைவில் இருக்கும் சிறிய ஊர். இங்கே இருக்கும் பாறைக்குன்றில் உள்ள குகையில் 18 கற்படுக்கைகளும், 3 கல் இருக்கைகளும் காணப்படுகின்றன. இதனுடைய காலம் கி பி ஆறாம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது.

நெகநூர்ப்பட்டி செஞ்சியில் இருந்து தென்கிழக்காக ஆறு கி மீ தொலைவில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். இங்கிருக்கும் அடுக்கன்கல் என்ற சிறிய பாறைக்குன்றின் கீழ் இருக்கும் குகையில் கி மு மூவாயிரத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்களும்,கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டும், தேய்ந்த நிலையில் சமணர் படுக்கைகளும் காணப்படுகின்றன. இந்தக் குன்றிற்கு ஒட்டி இருக்கும் இன்னொரு குன்றில் ஒரு முருகன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் இருப்பதால், அடுக்கங்கல்லிற்கும் ஒரு பாதுகாப்பு. இல்லைஎன்றால் எப்போதோ உடைக்கப்பட்டிருக்கும். தற்போது கூடக் க

 

ற்படுக்கைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இணயத்தில் பதிவு செய்தவற்றை இங்கு இணைத்து இருக்கிறேன்.
நன்றி,
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்.

விக்கிபீடியா சுட்டி:

நெகநூர்ப்பட்டி

காணொளிகள்:

திருப்பனமலை:
1) httpv://www.youtube.com/watch?v=8T0K4hkldWI&feature=related
2) httpv://www.youtube.com/watch?v=fdX6F7gz59Y&feature=related
3) httpv://www.youtube.com/watch?v=fE1YjVEMiLE&feature=related
4) httpv://www.youtube.com/watch?v=zXPdQA8IA3g&feature=related
5) httpv://www.youtube.com/watch?v=5KRHGW3NwBM&list=UUppaK1uqALtjRqhta8L0EKw&index=1&feature=plcp

ஊரணித்தாங்கல்:

1) httpv://www.youtube.com/watch?v=o8_P64RqeNA&feature=related
2) httpv://www.youtube.com/watch?v=mcW69vb3Yos&feature=related
3) httpv://www.youtube.com/watch?v=RhGenQQ49AM&feature=related

நெகநூர்ப்பட்டி:

1) httpv://www.youtube.com/watch?v=HafeDmWCxZM&feature=related
2) httpv://www.youtube.com/watch?v=4GLuE699TAU&feature=related
3) httpv://www.youtube.com/watch?v=ATkLq2f4xhM&feature=related

விக்கி மேப்ஸ்:

1) பஞ்சபாண்டவர் மலை

2) ஊரணித்தாங்கல் ஜைனக்குன்று

3) அடுக்கங்கால்

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 20 – தரங்கா, கும்பாரியா
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 21 – அசல்கர், தில்வாரா