ஆஸ்திரேலியா பயணம்

ன்றுகாலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் சென்னைக்குச் சென்றிறங்குகிறேன். நண்பர் பாலா ரயில் நிலையத்துக்கு வருவதாக ஏற்பாடு.அவரது இல்லத்தில் தங்குகிறேன். அருண்மொழிக்கு சில பொருட்கள் வாங்கவேண்டும். எனக்கும் சில பொருட்கள். என் பதிப்பத்தாரிடம் இருந்து புத்தகங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். மாலை வரை அலைச்சல் இருக்கும்

இன்றிரவு ஒன்பதரை மணிக்கு விமானநிலையம் செல்கிறோம். நள்ளிரவு பன்னிரண்டுமணிக்கு தாய் ஏர்வேஸில் ஆஸ்திரேலியாவுக்கு நானும் அருண்மொழியும் பயணமாகிறோம். காலை ஆறுமுப்பதுக்கு பாங்காக். அங்கிருந்து காலை ஒன்பதரை மணிக்கு மெல்போர்னுக்குக் கிளம்பி இரவு எட்டரைக்கு மெல்போன் செல்வதாக திட்டம்

பதினொன்றாம் தேதி ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடக்கும் எழுத்தாளர் கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். முருகபூபதி அவர்களின் இல்லத்தில் தங்குவேன் என நினைக்கிறேன். அதன் பின்னர் கான்பெரா . பின்னர் சிட்னி.

ஏப்ரல் 26 அன்று என்னுடைய ‘ஈழ இலக்கியம் விமரிசனப்பார்வை’ என்ற நூலை மெல்போர்னில் வெளியிடுகிறார்கள். 27 அன்று மாலை மெல்போர்னில் இருந்து கிளம்புகிறேன். மீண்டும் தாய்லாந்துவழியாக சென்னைக்கு

பயணங்கள் உற்சாகமானவை . அதிலும் கண்டங்கள் கடப்பதென்பது இந்த நூற்றாண்டு நமக்களித்திருக்கும் பெரும் வரம்

தொடர்புக்கு நோயல் நடேசன்  0411 606 767

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகவிஞனின் கட்டுரைகள்