கடிதங்கள்

அன்புள்ள ஜெ

உங்கள் தாய் தந்தையர் புகைப்படம் பார்க்க விருப்பப்படுகிறேன். ஏனென்றால் பலவருடங்களுக்கு முன் உங்கள் எழுத்துக்களுடன் சேர்ந்து அவர்களும் எனக்கு அறிமுகமாயினர். இத்தனை ஆண்டுகளாக அவர்கள் உங்கள் கதை மற்றும் கட்டுரையின் வாயிலாக ஏதேனும் ஒரு வழியில் வெளிப்பட்டுக்கொண்டே இருப்பதாக உணர்கிறேன். உங்களால் அவர்களை தவிர்க்க முடியாது என்றும் எண்ணுகிறேன். உங்களின் எழுத்தால் உங்களை பார்க்க எழும் மன எழுச்சி உங்கள் தாய் தந்தையர் பார்க்கவும்  ஏற்ப்படுகிறது. அதை  எனக்கு நானே ஏதாவது காரணம் சொல்லி தட்டி கழிக்க விரும்பவில்லை. இதில் தவறு ஏதும் இல்லை என் நினைக்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் வெளியிடவும்.

அன்புடன்

தனசேகர்

 

அன்புள்ள தனசேகர்

 

என் அப்பா அம்மாவின் படம் ஏதும் என்னிஅம் இல்லை. அவர்கள் பென்ஷன் வாங்கும்பொருட்டு எடுத்த ஒரு சிறிய படம் அண்னாவிடம் இருந்தது. அவர்களின் இயல்பற்ற மரணம் காரணமாக நினைவுகளை பேண நான் விரும்பவில்லை– பேணப்படாத நினைவுகள் எஞ்சுகின்றன

 

ஜெ

 


அன்புள்ள ஜெ.
சங்கீதா என்ற பெண்ணும் கூட VOICE OPTION ல் இருக்கிறாள், கவனித்தீர்களா?
ஹிந்தியில் கெட்டவார்த்தை டைப் செய்தாலும் அசூசைப்படாமல் சொல்கிறாள்.

எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் இது போன்ற விஷயங்களிலும் உங்களுக்கு ஈடுபாடு இருப்பது எப்படி என்று தான்.


Chandramohan Vetrivel,
New Delhi.

அன்புள்ள சந்திரமோகன்

 

எப்போதுமே எனக்கு விளையாடுக்கள் பிடிக்கும். அவை ஏதோ ஒருவகையில் நம்மை இயற்கையின் விளைஆடுடன் இணைக்கின்றன. தொழில்முறை விளையாட்டுகளையே நான் வெறுக்கிறேன். அவை மனித அகங்காரத்தின் வெளிப்பாடுகள்

ஜெ

 

 

நம்மில் இருக்கும் நமக்குப் பிடிக்காமல் இருக்கும் ஓர் அம்சத்தை இன்னொருவரில் கண்டால்கூட அவரை நாம் வெறுக்கிறோம். வெறுப்பின் ஊற்றுமுகங்கள் மிகமிக ஆழமானவை.”

உண்மை.

இளம்பிள்ளைவாதம் என்னைத் தாக்கிய போது, என் வயது இரண்டரை. இப்போது, முப்பத்து எட்டு. கர்நாடக இசையில் அறியப்பட்ட, ஒரு மிருதங்க வித்வான். மூன்று சக்கரங்கள் பொருத்திய கைனடிக் ஹோண்டாவில் சென்னையின் நீள அகலங்களைக் கச்சேரிகளுக்காய் கடக்கையில், சிக்னலில் காண நேர்கின்ற சக ஊனமுற்றவர்கள் முகம் திருப்பி எங்கேயோ பார்க்கிறார்கள். 

பழகுதற்கினியனாய் விளங்கும் என்னியல்பு வெகு சுலபமாக தோற்றுவிடும் இடங்களில் இதுவும் ஒன்று. People who are physically sound, mingles very easily with me than people with disabilities do.

முட்டாள்கள் – முட்டாள்களையும், குடிகாரர்கள் – குடிகாரர்களையும் நேசிப்பதில் கூட தடையேதும் இல்லை. ஆனால், உடற்குறைபாடு கொண்டவர் பாடு சற்று திண்டாட்டம் தான். வாழ்வின் கீழ்நிலைகளில் சார்ந்து வாழ்தல் தவிர்க்க இயலாத நிலையில் தான் வெறுப்பின்றி பழகுகிறார்கள்; சங்கங்கள் இயங்குகின்றன. இங்கே பலரும் இப்படித்தான் என்ற எண்ணமே அவர்களை சகஜமாக்கி விடுகிறது. இருவர் மட்டும் differently abled, மற்றவர்கள் சாதாரணர்கள் எனும் போது ஒரு இறுக்கம் வந்துவிடுகிறது.

கொஞ்சம் மேலே வந்து விட்டவர்கள் கூட, தன்னைக் குறித்த உயர் எண்ணப் பிழையாலேயே (superiority illusions), மனதின் ஆழத்தில் தேக்கிய தாழ்வு மனப்பான்மையால், தங்கள் மீதே வெறுப்புற்று, தன் பிம்பமாக ஒன்றைக் கண்டதும், முகம் திருப்பிக்கொள்கிறார்கள்.

அது, ஆரம்ப நிலை தயக்கமாக இருக்கலாம் என்று இன்னும் கொஞ்சம் சிரித்தோ, நட்பாகப் பார்த்தோ செய்தால், “எங்க ஏரியா, உள்ள வராதே” என்று title card போடுகிறார்கள்.

ஈரோடு நாகராஜன்.


wishes,

Erode Nagaraj.

1. http://ramsabode.wordpress.com/2006/10/07/erode-nagaraj/

2. http://www.chennaionline.com/chennaicitizen/2004/02nagarajan.asp

3. http://www.nscottrobinson.com/southindiaperc.php

அன்புள்ள ஈரோடு நாகராஜன்

 

தங்கள் கடிதம். உண்மை. மனித மனங்களின் வகைகளைந் ஆம் நம் வாழ்க்கை மூலம் அள்ளவே முடியாது. எளிய சூத்திரங்களுக்குள் அவை அடங்காது. பிறரை புரிந்துகொள்வது என்பது நுட்பமாக நோக்கினால் நம்மை புரிந்துகொள்வதே. பிறரைப் புரிந்துகொள்ள தன்னை நோக்குபவன், தன் வாழ்க்கையை தன்னை மட்டும் சார்ந்தே அமைத்துக் கொள்பவன் மட்டுமே மகிழ்ச்சியை அடைய முடியும். பிறர் என்பது நம்மைச்சுற்றி உள்ள இயற்கை என்னும் ஆடியில் பிரதிபலிக்கும் நம்முடைய பிம்பங்களே

 

ஜெ

 

பேசும் பாவை

அனுபவங்கள்:கடிதங்கள்

முந்தைய கட்டுரைஆபிரகாம் பண்டிதர்
அடுத்த கட்டுரைராஜ் ஆதித்யா:கடிதங்கள்