யானைகளின் பாதையில் தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ள கதிரொளி மின்வேலிகளை அகற்றுங்கள்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் சென்ற வாரம் உத்தரவிட்டுள்ளது. இயற்கை ஆர்வலர் கொடுத்திருந்த மனுவைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். “மனிதன் தன் பேராசை காரணமாகவும் தன் சுகத்துக்காகவும் யானைகள் மற்றும் வனவிலங்குகளின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதைக்’ கண்டிக்கவும் செய்துள்ளது.