கடிதங்கள்

பெருமதிப்புக்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று தங்கள் ‘வலைத்தளத்தில்’ பதிவான ”நூறு நாற்காலிகளும் நானும்” மறுபடியும் என்னை ‘அற உலகத்திற்கு’ அழைத்துச் சென்றுவிட்டது. மீளமுடியாமல் தவிக்கிறேன். முதன் முதலில் இத்தொகுப்பைப் படித்த போது என்ன இருந்தாலும் இது ஒரு கதைதானே என்ற ஒரு துளி எண்ணம் மன ஓரத்தில் இருந்தது. பிறகு இத்தொகுப்பிற்கு வந்த பின்னூட்டத்தைப் பார்த்து, நிகழ்கால மனிதர்களுக்கும் இதற்கும் கண்டிப்பாகத் தொடர்பு உள்ளது என்று அறிய நேர்ந்தபோது மனதில் சற்று நம்பிக்கை துளிர்த்தது.

இன்று இப்பதிவைப் படித்தவுடன் மேலும் அந்த நம்பிக்கை மனதில் ‘விஸ்வரூபமாக’ எழுந்து நிற்கிறது. இதற்கு நன்றி.

அன்புடன்,

அ.சேஷகிரி
ஆழ்வார்திருநகரி

ஜெ,

என் அண்ணன் சீனா சென்றுள்ளான் – அங்கு உட்கார்ந்து ‘காடு’ படித்துக் கொண்டிருக்கிறான். எப்படியோ, வெளிநாட்டுச் சூழலில் இன்னும் மனக் கொந்தளிப்பு மேம்படுகிறது என்கிறான்.

உங்களுக்குச் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது.

நன்றி.

வி.சரவணன்

முந்தைய கட்டுரைஞானமும் மெய்ஞானமும்- சீனு கடிதம்
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 8 – கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ்