தமிழறிஞர் அடிகளாசிரியர் 08.01.2012 இரவு 11 மணிக்கு மறைந்தார். அவருக்கு வயது 102. விழுப்புரம் மாவட்டம் கூகையூரில் வாழ்ந்த பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களின் இயற்பெயர் குருசாமி. அடிகளாசிரியர் என்பது அவரது புனைபெயர்.
சென்னைப் பல்கலையிலும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலையிலும் பேராசிரியராகப் பணியாற்றிய அடிகளாசிரியர் அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். மரபுக்கவிதையில் குறுங்காவியங்களை யாத்திருக்கிறார்.
அடிகளாசிரியருக்கு அஞ்சலி.