யானைடாக்டர்-குழந்தைகளின் படங்கள்

அருமையான படங்கள். நானும் பள்ளிப் பருவத்தில் பல ஓவியப் போட்டிகளில் பங்குபெற்றிருக்கிறேன். எங்கும், இத்தனை படைப்பூக்கத்தை ஒரே இடத்தில் கண்டதில்லை. அபாரமான திறமையும் கற்பனையும் காட்சி அமைப்பும் கொண்ட படைப்புகள். கதைகள் தரும் கற்பனையும் மனவிரிவும் அதிகம் தான். படங்கள் காட்டிக் கதை சொல்வதிலிருந்து கதை சொல்லிப் படம் வரையச் செய்வதும், படைப்பூக்கத்தைத் தூண்டும் நல்ல உத்தியாகப் படுகிறது.

நன்றி
அனு.

ஜெ,

வாளியில் நீரை மொண்டு குளிக்கும் யானை, மிகப்பெரிய நீர்நிலையைத் தன் அகத்தில் எண்ணி ஏங்குவதும் – கதையில் நேரடியாகச் சித்தரிக்கப்படாத ஒன்று.அதை அவர்கள் உள்வாங்கி வரைந்துள்ளனர்.  எலும்புக்கூடாகக் கிடக்கும் யானை, நீர் வற்றிக் காடழிந்து மடிந்து கிடக்கும் யானைகள், கண்களில் நீர் வடியக் காலைத் தூக்கிப் பார்க்கும் யானை, ஒரு கதையின் ஆழமும் தாக்கமும் எத்தகையது என்று எண்ணினால் வியப்பாக உள்ளது!  படங்களைப் பார்க்கையில் உண்மையில் நிறைவாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது.  எத்தனை நவீனப் படைப்பாளிகள் குழந்தைகளின் மனதில் உட்புக முடிந்தது என்று தெரியவில்லை!  அத்தனை விருதுகளுக்கும் மேலான ஒரு அங்கீகாரம் இது!

உண்மையில் படக்கதையாக நான் யோசித்ததும் இது போல ஒன்றைத் தான்.பதிப்பாளர் அரங்கசாமி யானை டாக்டரின் அடுத்த பதிப்பின் பொழுது இப்படங்களைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும், குறைந்த பட்சம் அட்டைகளிலேனும் இரண்டு படங்களைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இலவசமாகக் கொடுக்காமல் ஐந்து ரூபாய் நிர்ணயிக்கலாம் – வரும் நிதியை அந்த அமைப்புக்கே கூட வழங்கலாம்.

சுனில் கிருஷ்ணன்


விருது புகைப்படங்கள்


குழந்தைகளின் படங்கள் புகைப்படங்கள்


குக்கூ குழந்தைகள் வெளி

தொடர்புக்கு :9965689020, 9942118080 , 9994846491

முந்தைய கட்டுரைபூமணி- சொல்லின் தனிமை
அடுத்த கட்டுரைஏழாம் உலகம்- விமர்சனம்