கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

உங்கள் இணையத்தில் இப்போதெல்லாம் உங்கள் கட்டுரைகளுக்கு இணையாகவே கடிதங்களும் என்னைக் கவர்கின்றன… சில சமயம் அதிகமாகவே… எத்தனை வாசகர்கள் உங்களுக்கு… எத்தனை விதமான வாசகர்கள்… ஆதிச்சநல்லூர் பற்றி நீங்கள் எழுதினால் அதன் ஆதி வரை சென்று வாசகர்கள் எழுதுகிறார்கள்…

தமிழின் பெயரை அரசியல்வாதிகளும், விதண்டாவாதிகளும் மட்டுமே பயன்படுத்தி வரும் தமிழக சூழலில், அறிவுஜீவி என்றாலே அவன் தமிழனின் எதிரி என்று உருவகப்படுத்தப்படும் காலத்தில், இத்தனை விரிவான, விவரமான வாசகக் கூட்டத்தை இணைத்து, அவர்களின் கருத்துக்களைப் பொறுமையாகப் படித்துப் பதிப்பிக்கும் பணி உண்மையில் அசாதாராணமானதே…

தமிழ் வாசகச் சூழலின் ஒரு மிக முக்கியமான நிகழ்வாக உங்கள் இணையம் எனக்குப் படுகிறது… தமிழ் நாளையும் வாழுமென்றால், அதற்கு உங்கள் தளத்தின் பங்களிப்பு மறுக்க முடியாததாகவே இருக்கும்…

இந்த வாசக வட்டத்தை முறைப்படுத்தி தமிழுக்கு அறிவார்ந்த பங்களிப்பு ஏதேனும் செய்வது பற்றி எண்ணம் இருந்தால் அது குறித்தும் தாங்கள் எழுதலாம்.

நன்றி
ரத்தன்


 

 

அன்புள்ள ரத்தன்

எனக்கு வரும் கடிதங்களில் ஒரு பங்கே இங்கே வெளியாகிரது. பெரும்பாலான கடிதங்கள் இனையத்துக்குரிய ஆங்கிலத்தில் சுருக்கமான சில வரிகள். அவற்ற்ரை வெளியிடுவதில்லை. ஆங்கிலக் கடிதங்கலை தமிழாக்கம் செய்தே வெளியிடுகிறேன். சிலசமயம் அவசரத்தமிழாக்கம். காரனம் இதை ஒரு தமிழ் இனைய வெளியாக மட்டுமே நடத்தவேன்டும் என்பதுதான்.

 இதில் எழுதும் பலருக்கு இதர்கு முன் தமிழில் எழுதும் பழக்கம் இல்லை. பலருக்கு தமிழ் இனையத்தை வாசிக்கும் வழக்கமும் இல்லை. பலரை நானே சொல்லிக்கொடுத்து தமிழ் எழுதவைக்கிறேன். கடிதங்களில் கூடுமானவரை தமிழ் கலைச்சொற்கலை புகுத்தியும் வரிகளை செப்பனிட்டும் சரி செய்கிறேன். ஆகவே மெல்ல மெல்ல ஒரு நல்ல விவாத வெளி உருவாகிவிட்டிருக்கிறது

என்ன சிக்கல் என்றால் பலர் முழுமையாக வெளிபப்ட விரும்புவதில்லை. இணையத்தில் உள்ள வசைகளை அஞ்சுகிறார்கள். ஒரு வாசகர் இங்கே பார்வதிபுரத்திலேயே இருப்பவர். அவரை தற்செயலாகத்தான் அரிமுகம்செய்ய முடிந்தது. இனையத்தின் ஆபத்து அப்படிபப்ட்டது.

ஆகவே இனைய உரையாடல்குழுவை இப்படியே ஒரு ‘முகமிலி’ குழுவாக இருக்க வைப்பதே நல்லது என நினைக்கிறேன்.

எனக்கு தினம் 50 கடிதங்கள் பச்சை பச்சையாக வசைமழையுடன் வருகின்றன. தமிழ்த்தேசியம், இடது தீவிரவாதம் மற்றும் இஸ்லாமிய தேசியவாதம் சார்ந்தவை. மூன்ரு தரப்பும் ஒன்றாகவே செயல்படுகின்ரன போல. இதில் சிலரைப்பற்றி நான் தனிப்பட்ட முறையில் விசாரித்து தெரிந்துகொன்டேன். உதாரணமாக மதுரையைச்சேர்ந்த ஒரு ஆசிரியர்– சாதாரண அரசூழியர்– இணையத்தில் கிட்டத்தட்ட ஒரு ஆயுதமேந்திய தலைமறைவு புரட்சியாளராக அனல் கக்குகிறார். ஆகவே இம்மாதிரி குரல்களை நான் அனுமதிப்பதில்லை. வசை இல்லாமல்  இருப்பதனால்தான் இந்த தளத்தில் இத்தனை பங்களிப்பு இருக்கிறது

இதுவே தொடரட்டும்
ஜெ

– அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் இணையதளத்தில் வரும் கடிதங்களை நான் ஆர்வத்துடன் படிப்பேன். எத்தனை வகையான கடிதங்கள். எத்தனை வகையான மனிதர்கள். பெரும்பாலானவர்கள் எதாவது ஒரு புதிய கருத்தைச் சொல்கிறார்கள். அதேபோல அவர்கல் அளிக்கும் இனைப்புகலும் அருமை. நான் அதிகமாக இணையத்தில் நேரம் செலவிட முடியாத நிலையில் இருப்பவன். கடுமையான வேலை. இப்போது பொருளாதார மந்தம் ஆகவே ஆள் குறைப்பும் வேலைச்சுமையும். கொஞ்சமாவது இளைப்பாறலாக அமைவது உங்கள் இனையதளம் தான். அதில் கடுமையாக ஒன்ரும் இல்லமல் அறிவு சார்ந்து பயனுள்ள முறையில் இருப்பதை எப்படி பாராட்டினாலும் தகும். சிற்பங்கள் இந்திய கட்டிடக்கலை இவை பற்றி எனக்கு ஆர்வம் ஏற்பட்டதே இந்த இணையதளம் மூலம்தான். வாழ்த்துக்கள்
சமீபத்தில் சில வாசகர்கள் காணாமல் ஆகிவிட்டார்கள். முரளி,டெக்னிக்கல் கல்சல்டண்ட் என்று  ஒருவர் சினிமாவைப்பற்றி நிறைய எழுதியிருந்தார்.  
அன்புடன்
கெ
முந்தைய கட்டுரைவிதிமுள்
அடுத்த கட்டுரைகடல்,நிலம்,மனம்