வெளியின் ஆடை

மனம் – தறி
வாக்கு – இழை
பூமிக்கான ஆடையை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்

நெய்யும் துணியின் மறுமுனை
எங்கே முடிகிறது?
நதிபோல் கடலிலா?
வானம்போல் வெளியிலா?

என் ஆரம்பிக்கும் சுகுமாரனின் கவிதை சமீபத்தில் நிகழ்ந்த ஓர் அபூர்வ மன எழுச்சி . சச்சிதானந்தனின் சாயல்கொண்ட அவரது பழைய பாணிக்கவிதைகளை நினைவூட்டுகிறது. கவிதையின் தலைப்புகூட.ஆனால் சச்சி ஒருபோதும் இக்கவிதை தொடும் முடிவிலியை தொட்டறிய முடிந்ததில்லை. கவிதை என்பது பாணியில் உருவத்தில் நடையில் இல்லை. கவிஞன் என்ற ஆளுமையில், கவி நிகழும் கணத்தில் உள்ளது என நினைத்துக்கொண்டேன்.

கவிதை அவரது இணையதளத்தில்

முந்தைய கட்டுரைகண்ணாடிக்கு அப்பால் – சிறுகதை
அடுத்த கட்டுரைசைவ வெறுப்பா?