செம்பை

அன்புள்ள சஞ்சய்

மலையாள ஓவியரான ‘நம்பூதிரி’  அவர் சுயசரிதையை எழுத்துக்கள் மற்றும் வரைபடங்களுடன் அருமையான நூலாக எழுதியிருக்கிறார். அதில் அவரது இளமையில் நெருங்கிபப்ழகிய செம்பை வைத்யநாத பாகவதர் பற்றி நிறைய வேடிக்கையான நிகழ்ச்சிகளையும் அற்புதமான  கோட்டுப்படங்களையும் அளித்திருக்கிறார்.செம்பை மார்பு தொங்க அமர்ந்திருக்கும் காட்சி அழகானது.

செம்பையின் ஒரு ஜோக்

ரயிலில் ஒருவர் செம்பையிடம் கேட்டார். அவரது குடுமியை மட்டுமே அடிபப்டையாகக் க்ண்ட கேள்விதான்.

”பாகவதராக்குமோ?”

”ஓ!” என்றார் செம்பை– ஆமோதிப்பாக

”அரியக்குடியா?”

”ஓ” என்றார் செம்பை மறுப்பாக — பாலக்காட்டில் எல்லாவற்றுகுமே ஓ தான்

”செம்ம்மங்குடியா?”

”ஓ” என்றார் செம்பை.

அவர் கொஞ்ச நேரம் பாகவதர் பெயர்களுக்காக தேடிவிட்டு துணிந்து அடித்தார் ”அப்டீன்னா, குன்னக்குடியா?”

செம்பை சற்றே கடுப்பாகி சொன்னார். ”செம்பையாக்கும். குடி இல்லை கேட்டேளா?”

 

 

 

இன்னொரு ஜோக், இது செம்பையைப்பற்றி வி.கெ.என் என்னும் மலையாள எழுத்தாளர் சொன்னது

செம்பைக்கு அறுபதுவயதுவாக்கில் திடீரென்று குரல் அடைத்துப் போயிற்று. பாடுவது மட்டுமல்ல பேச்சும் முடியாமல் ஆகியது.

நேராக குருவாயூரப்பனிடம் போனார். ”கேட்டையோ செறுக்கா, எனக்கு இப்பம் பாடமுடியல்லை. என்ன செய்யபோறாய்?”

குருவாயூரப்பன் பெண்கள்பக்கமாக பார்த்துப் பேசாமலிருந்தார்

”வாழைபபழம் சீனி என்ன வேணுமாலும் கேளூ. ஆறுமாசம் கழிஞ்சு வந்து துலாபாரம் வச்சு தந்துடறேன். இப்போ குடுத்தா நான் குடும்ப ஸ்வத்துக்களை விக்கணம்…”

குருவாயூரப்பன் பொருட்படுத்தவில்லை. பார்த்தார் செம்பை அங்கே குந்தி விரதம் இருக்க ஆரம்பித்தார். நாற்பத்தொருநாள். கடும் விரதம். கோயிலின் பால்பாயசம் மட்டுமே ஒன்பதுவேளை ஆகாரம். தொட்டுக்கொள்ள நேந்திரம்பழமும் நெய்யும்.

ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் ஒரு தொண்ணூறு நாள். ஜோலி ஆகவில்லை.

குருவாயூரப்பன் செம்பையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.  செம்பை வயலின் கற்றுக்கொண்டார். கோகுலாஷ்டமிக்கு சன்னிதியில் ஒரு வயலின் கச்சேரி செய்தார்

மறுநாளே குரல் திரும்பிவிட்டது. குருவாயூரப்பனின் இடுப்பு கொஞ்சம் நெளிந்து இருப்பதைப் பார்த்திருக்கலாம்– செம்பையின் வயலின் கச்சேரியில்  ஆனதுதான்

ஜெயமோகன்

 

 

செம்பையின் கடைசிக் கச்சேரி’கருணசெய்வான் எந்து தாமஸம் கிருஷ்ணா’ பாடி முடிக்கிறார்- குருவாயூரில்

http://tamizhile.blogspot.com/

 

 சஞ்சய் சுப்ரமணியனின் வலைப்பூவில் எழுதிய எதிர்வினை

“ஹரிகாம்போதியில் வர்ணமும் கான்செருக்கு மருந்தும்”

 

http://www.google.co.in/imgres?imgurl=http://i1.tinypic.com/23v1dgy.jpg&imgrefurl=http://rasikas.org/chembai/chembailastday.html&usg=__OLqMr1HpzzEbA3Va_lQ5ogyzQEo=&h=301&w=225&sz=15&hl=en&start=1&sig2=tu0TIkx1hHF3ZUTWBZF2Ng&tbnid=bP4NGq-wJo3p2M:&tbnh=116&tbnw=87&prev=/images%3Fq%3Dchembai,namboodiri,drawing%26hl%3Den%26sa%3DX&ei=CdjLSc6ZGpKC7QPrrpGuBw

முந்தைய கட்டுரைஒருநாள், நெல்லை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைசில மலையாளக் கவிதைகள்