ஓராயிரம் கண்கள் கொண்டு

நாவலைப் படித்தபின் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலை இருவர் எழுதியிருக்கிறார்கள் என்பதுதான். ஒன்று ஜோ எனும் படித்த மீனவ இளைஞர், களப்பணியாளர், ஆய்வாளர், இன்னொருவர் டி. குருசா எனும் மீனவ கிராமத்துக் கிழவி. கொஞ்சம் கற்பனை செய்தால் அவளைக் கண்கள் முன் கொண்டுவந்துவிடலாம். ஓலைக் குடிசையின் கீழ் அமர்ந்து கொண்டு, இடித்து இடித்துக் குழிவிழுந்த ஒரு கல்லில் மழுங்கிப்போன இன்னொரு கல்லை வைத்து, கல்லைப் பல்லாக்கி செக்கச் செவேலென வெற்றிலையை இடித்துக்கொண்டே, கதை கேட்க யாராவது வரமாட்டார்களா என்று காத்துக்கிடப்பவள். ‘எய்யா, எக்கி எங்க போற இங்கன இரி’ என வருவோரையும் போவோரையும் கதை சொல்ல அழைத்துக்கொண்டிருப்பவள். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு ஊரின் மூலை முடுக்குகளில் நிகழும் மிகவும் அந்தரங்கமான தகவல்களைக் கூடத் தெரிந்து வைத்திருப்பவள். அவளின் கதைகளும் இந்த நாவலில் சரி சமமாக இடம் பெற்றுள்ளன..

சிறில் அலெக்ஸ் ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு பற்றி எழுதிய கட்டுரை

சிறில் அலெக்ஸ்

[சிறில் அலெக்ஸ்]

விமர்சனங்கள்

ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…

ஆர்வி -ஆழிசூழ் உலகு பற்றி


நவீன் ஆழிசூழ் உலகு பற்றி


கரு ஆறுமுகத்தமிழன் ஆழிச்சூழ் உலகு


ஜோ டி குரூஸ் பேட்டி

முந்தைய கட்டுரைஇரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைஊமைச்செந்நாய்- ஒருகடிதம்