ஐந்துவருடம் முன்பு பரத் பாலா இயக்கத்தில் ஹாலிவுட் தயாரிப்பாளர்களான வால்ட் டிஸ்னி தயாரிப்பில் ஒரு இந்தோ-ஜப்பானிய கூட்டுத்தயாரிப்பாகப் ‘பத்தொன்பதாவது படி’ என்ற தமிழ்-ஆங்கிலம்-ஜப்பானிய படம் தயாரிப்பதாக இருந்தது. மூலக்கதை எம்.டி.வாசுதேவன்நாயர். நான் திரைக்கதை வசனம் எழுதினேன். ஜப்பானியநடிகர் அசானோ [Tadanobu Asano] கதைநாயகன். அவரது குரு கமல். அந்தப்படம் தயாரிப்பாளர்களால் கைவிடப்பட்டது.
கதையின் மையப்புள்ளிகளில் போதிதர்மர். அதற்காக போதிதர்மர் பற்றி நிறைய ஆய்வுகள்செய்தேன். ஏற்கனவே செய்யபப்ட்ட ஆய்வுகளைத் திரட்டி எனக்கு அளித்தார்கள். போதிதர்மர் ஒரு மிக சுவாரசியமான தொன்மம். அவர் கேரளக்கடற்கரையில் இருந்து, அதிலும் வர்மக்கலையின் தாயகமான தென்குமரியில் இருந்து, சென்றிருக்கலாம்.