கடிதங்கள்

திரு. ஜெயமோகன்,

 

நீங்கள் www.keetru.com படிப்பதுண்டா? எஸ்.ராமகிருஷ்ணன் இந்த வருட துவக்கத்தில் சிறந்த இணையதளமாக இதைத் தெரிவு செய்து எழுதியிருந்தார். ‘நான் கடவுள்’ படம் தொடர்பாக இரண்டு காட்டமான விமர்சனங்கள் கூட அதில் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உங்களை விமர்சித்து கட்டுரைகள் வெளியிடுகிறார்கள். நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

நட்புடன்

விஜயக்குமார்.

அன்புள்ள விஜய்

விமரிசிக்கட்டும், அதில் என்ன இருக்கிறது? அது சிற்றிதழ்களின் ஒரு தொகுப்பு என நினைக்கிறேன். தமிழில் இன்றுள்ள அரசியல் சிற்றிதழ்களில் பெரும்பாலானவை முதிரா மார்க்ஸிய  போலிப்புரட்சியும் இனவாத திராவிட இயக்க அரசியலும் பேசுபவை. அவர்களின் கருத்தை அவர்கள் சொல்கிறார்கள். பொருட்படுத்தும்படி ஏதேனும் இருந்தால் யாராவது நண்பர்கள் சொல்வார்கள்– வாசிப்பேன். ஆனால் அது மிக மிக அபூர்வம். இந்த இதழ்களில் என்ன இருக்கும் என்பதை வாசிக்காமலேயே தெரிந்துகொள்ளலாம். 40 வருடங்களாக அதே வாய்ப்பாடுதான். நான் வாசிப்பதில்லை. நேரமில்லை

ஜெ

 

 

அன்புள்ல ஜெ

சாரு நிவேதிதா திரைக்கதை எழுதியிருக்கிறாராமே. படமாகும்போது நீங்கள்தான் வசனமாமே? வாசித்தீர்களா?

சிவம்

அன்புள்ள சிவம்,

‘அட்வான்சைக் கொடுங்கய்யா’ அதுதான் என் நிரந்தரமான பதில்

வேடிக்கை இருக்கட்டும். சாரு நிவேதிதா உண்மையிலேயே சில வேறுபட்ட படங்களை எடுக்கமுடியும். முன்பின் தொடர்பில்லாத கதையோட்டமும் நுண்ணுணர்வை அதிரச்செய்யும் காட்சிகளும் கொண்ட Morbid ரக கலைவடிவங்கள் உலகமெங்கும் உண்டு. அவற்றுக்கு தமிழில் அதிக முன்னுதாரனங்கள் இல்லை– ஸீரோ டிகிரி அதற்கு நல்ல உதாரணம். [அதைப்பற்றி நான் முன்னர் எழுதியிருக்கிறேன்] பெரும் பாரம்பரியம் கோண்ட நம் நாடில் அவற்றைக் கோண்டு நாம் நம் அஸ்திவாரங்களைக் கொஞ்சம் பரிசீலிக்க முடியும்

அத்தகைய சினிமாக்கள்கூட தமிழில் செல்லுபடியாகும் என்பதுதான் இன்றுள்ள நிலைமை. திரையரங்குகளில் மிக நுண்ணிய– மிக எதிர்மறையான விஷயங்கள் கூட ரசிக்கப்படுவதைக் காண்கிறேன். கோடிகள் கொட்டி எடுக்கப்படும் சண்டைக்காட்சிகளில் செல்போனை நோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.சாஆரு முயல்வது நல்லதுதான்.

சாரு மட்டுமல்ல பிற எழுத்தாளர்களும் சினிமாவுக்குள் வருவது விதவிதமான ரகங்களை உள்ளே கொண்டுவரும். சினிவவுக்குள்ளேயே சினிமாவை அள்ளும்போக்கு மட்டுப்படும்

ஜெ

***

வணக்கம் ஜெயமோகன்.
தாங்கள் எழுதும் பதிவுகள் இதமாக உள்ளன.
பகடி பற்றி எழுதியது சிறப்போ சிறப்பு. நம்ம ஊரில் வேண்டாதவர்களைப் பற்றி வினையாகப் பேசுவதைத்தான் பகடியாகக் கருதுகிறார்கள். நமது எழுத்தாளர்களைப் பகடி செய்தால் அவ்வளவுதான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். சிலர் ஆள் வைத்து, தண்ணீ வாங்கிக் கொடுத்து அடக்கவும் செய்வார்கள். உங்களது சில நாவல்களின் பெயரை சிலபேருக்குப் பட்டப்பெயராக சூட்டியுள்ளோம். நட்பு கொண்ட எழுத்தாளர்களை, அவர்களின் எழுத்துக்களைக் கிண்டல் செய்துள்ளோம் உரிமையோடு. ஆனால் சம்பந்தபட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் நேரில் செய்ய தயக்கம். கோணங்கி மொழியை இதழ்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் பின்பற்றினால் எப்படி இருக்கும் என்று ஓருநாள் கலக்கினோம். ஆனால் அவரது அடிப்பொடிகளோ எங்கள் மீது தீராப்பகை கொண்டதே மிச்சம்.

 

போஸ்,

அன்புள்ள போஸ்

எதிலே விளையாடுவதென வரைமுறையே இல்லையா? கோணங்கி மொழியை உண்மையிலேயே நம் வார இடக்ழ்கள் கையாள ஆரம்பித்தல் சாத்திஅய்மே. நா.கதிர்வேலன் அதைச்செய்யும் திறமை உள்ள ஆலும்கூட. தமிழகம் என்ன ஆவது?

ஜெ

 

ஜெ..

ருத்ரன் பிச்சைக்காரகளுக்கு சங்கம் அமைத்துப் போராடுவது என்பது நீங்கள் பேராசிரியரிடம் சொன்னது போல் அவர் படமல்ல. அப்படி ஒரு படம் 50களிலேயே வந்து விட்டது பராசக்தி தமிழின் சிந்தனைகள் இன்னும் 50 களில் நின்று கொண்டிருப்பது பெரு மகிழ்ச்சிக்குரிய விஷயம்.  கொஞ்சம் அப்படியே பின்னாடி போனால் தமிழ்ச் சங்கம் வந்து விடும். வாழிய செந்தமிழ்!! வாழ் நற்றமிழர்

பாலா


வம்புள்ள பாலா

உலகளாவிய புதிய  பொருளியல் சூழலில் இடதுசாரிகள் அந்தப்பக்கமாக கண்ணோட்டினால் ஓட்டு தேறுமோ?
ஜெ

முந்தைய கட்டுரைஅனல் காற்று – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசஞ்சய் சுப்ரமணியம்