அவுஸ்திரேலியாவில் தமிழ்

             

 

 தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்- அறிந்ததைப்பகிர்ந்து- அறியாததை அறிந்துகொள்வதற்காகஅவுஸ்திரேலியாவிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் தமிழ்ப்படைப்பாளிகளை வருடாந்தம் ஒன்றுகூடச்செய்யும் எழுத்தாளர்விழா எதிர்வரும் ஏப்ரில் மாதம் 11 ஆம் திகதியன்று விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் முழுநாள் நிகழ்வாக நடைபெறவிருக்கிறது.

 

கல்தோன்றி மண் தோன்றாக்காலம்.என்று வாய்ப்பாடுகளைச்சொல்லிக்கொண்டிராமல்- கலை, இலக்கியத்துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எம்மவர்களை ஒருங்கிணைத்து ஆக்கபூர்வமாக பல பணிகளை முன்னெடுப்பதற்காகவும் இந்த எழுத்தாளர் விழா இயக்கம் தொடர்ந்து செயல்படுகிறது.

 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத்தமிழர்கள் இலங்கைக்கும் பிஜித்தீவுக்கும் தென்னாபிரிக்காவுக்கும் லம்பெயரந்திருந்தபோதிலும், அமரர் புதுமைப்பித்தன் ஈழத்தில் மலையகத்தில் தமிழர்களின் நிலை குறித்து துன்பக்கேணியில் எழுதியிருந்தாலும்- பிஜித்தீவில் கரும்புத்தோட்டங்களில் தமிழ் மக்கள் வடித்த கண்ணீரை அறிந்து மகாகவி பாரதி கேட்டிருப்பாய் காற்றே.பாடியிருந்தாலும் புலம்பெயர்ந்தோர் இலக்கியம்என்ற பதம் பேசுபொருளாகியது ஈழத்தமிழர்களின் அந்நிய தேச புலப்பெயர்வுக்குப்பின்புதான்.

 

 புலம்பெயர்வு கலை-இலக்கியம் தொடர்பாக விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்திருக்கும் சூழலில், இந்த கடல் சூழ்ந்த கங்காரு நாட்டில் வாழ்கின்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வானொலி ஊடகவியலாளர்கள் நடன, நாட்டுக்கூத்து, நாடக கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தீவிரமான வாசகர்கள் அனைவரும் தத்தம் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் ஒன்று கூடும் எழுத்தாளர் விழாவை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் நடத்தி வருகிறது.

 

 

 இந்த அமைப்பு அவுஸ்திரேலியாவின் சட்டதிட்டங்களுக்கு அமைய பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும். இதனது தொடர்ச்சியான கலை, இலக்கியப்பணிகளை அவதானித்திருக்கும் விக்ரோரியா மாநில பல்தேசிய கலாசார ஆணையம் வருடாந்தம் சிறிதளவு நிதியுதவியும் வழங்கிவருக்கிறது. அத்துடன் எழுத்துத்துறையுடன் ஈடுபாடுள்ள பலர் இச்சங்கத்தில் ஆயுள் சந்தா செலுத்தி நிரந்தர அங்கத்தவர்களாகவும் இணைந்து இயங்குகின்றனர்.


ஒன்பதாவது விழா       

 

 

 ஏதிர்வரும் ஏப்ரில் மாதம் நடைபெறவுள்ள ஒன்பதாவது விழாவில் கருத்தரங்கு, மாணவர் அரங்கு, கவியரங்கு, கலையரங்கு ஆகியனவற்றுடன் நூல்-.இதழ் விமர்சன அரங்கும் இடம்பெறவுள்ளன.

 இம்முறை மல்லிகை 44 ஆவது ஆண்டு மலர், ஞானம் நூறாவது இதழ், யுகமாயினி மாத இதழ் ஆகியனவற்றுடன் ன்மார்க்கிலிருந்து விழாவுக்கு வருகைதரும் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் எழுதியுள்ள புதிய நாவல் மக்கள்;;;…மக்களால்…மக்களுக்காக…மற்றும் லண்டனில் வதியும் எழுத்தாளர் முல்லை அமுதன் தொகுத்துள்ள 44 மறைந்த படைப்பாளிகளைப்பற்றிய இலக்கியப்பூக்கள் ஆகியன விமர்சன அரங்கில் விமர்சிக்கப்படவுள்ளன.

 

 

 மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய மாநில நகரங்களில் வதியும் எழுத்தாளர்களும் இலங்கை, டென்மார்க்கிலிருந்து சில எழுத்தாளர்களும் ஒன்பதாவது எழுத்தாளர்விழாவில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

 

 

 

yugamayini.blogspot.com

Chithan
முந்தைய கட்டுரைஅனல் காற்று – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇணையத்தில் எழுத…