தமிழ் ஸ்டுடியோ

இலக்கிய மின்னிதழான தமிழ் ஸ்டுடியோ என்ற இணையதளத்தைப்பற்றிய தகவலை ஓரு நண்பர் அனுப்பி வைத்தார். பெயர் இதை ஒரு சினிமா இதழ் என்று எண்ணச்செய்தது. இது ஓர் இலக்கிய- பண்பாடு மின்னிதழ். வலைப்பூக்கள் வந்தபின் மின்னிதழ்கள் சோர்வுற்றுவிட்டிருக்கின்றன. ஆனால் வலைப்பூக்களின் எழுத்துக்கள் பல இடங்களிலாகச் சிதறிக்கிடக்கின்றன. மீண்டும் மின்னிதழ்களுக்கான தேவை உள்ளது என்பதை உயிரோசை நிரூபித்தது. இந்த மின்னிதழும் அதில் ஒன்றாக அமையலாம்.

பல்வேறு திறனாளர்கள் எழுதும் பொதுத்தளமாக அமைய வாய்ப்புள்ள ஓர் இதழ் என்ற எண்ணம் இதை வாசித்தபோது உருவானது. விரிவான சிகட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் புத்தக மதிப்புரைகள் இசை பற்றிய கட்டுரைகள் என பல வகையிலும் முழுமையான இதழாக இது உருவாகவுள்ளது. இசை குறித்து லலிதா ராம் எழுதும் கட்டுரைகளை வாசிக்க எனக்கு ஆர்வம் உருவாகியது– நண்பர் ஷாஜியின் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் உருவான ஆர்வம் அது.  மேலும் பலர் பங்கேற்கும்போது தமிழின் முக்கியமான ஒரு ஊடகமாக இது ஆகக்கூடும். அதற்கு வாழ்த்துகிறேன்

 

 
http://www.thamizhstudio.com/ilakkiyam.htm

முந்தைய கட்டுரைமுஞ்சிறை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிலப்பதிகாரம், ஒரு புதிய பதிப்பு