மொழி என்ற பேரில் ஓர் ஆங்கில இணைய இதழ் தொடங்கப்பட்டுள்ளது. மொழி அறக்கட்டளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுசித்ரா ராமச்சந்திரன், பிரியம்வதா ராம்குமார் முயற்சியால் தொடங்கப்பட்டது. இந்திய மொழிகளில் இருந்து ஆங்கிலத்துக்கான மொழியாக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது இந்த அமைப்பு.
அதன் சார்பில் மொழி மொழியாக்கப் போட்டிகள் மூன்றாண்டு முன்பு தொடங்கப்பட்டன. இன்று இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஓர் இலக்கியப்போட்டியாக அமைந்துள்ளது அது. ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பாளர்களை அது அடையாளம் கண்டுள்ளது. மொழி போட்டி முடிவுகள் 2024 அறிவிக்கப்பட்டுள்ளன. (மொழி போட்டி விருதுகள் 2024)
மொழி இணைய இதழ் முதன்மையாக இந்தியப்படைப்புகளின் ஆங்கில மொழியாக்கங்களை வெளியிடுகிறது. அவை போட்டிகளுக்காக அனுப்பப்பட்ட படைப்புகள். கூடவே இந்த இணைய இதழ் இலக்கிய விமர்சனங்களையும் வெளியிடவுள்ளது. இந்திய ஆங்கிலச் சூழலில் அழகியல்நோக்குள்ள விமர்சனம் என்பது மிக அரிது. சமூகவியல், அரசியல் நோக்கு மட்டுமே ஓங்கியுள்ளது. மொழி அந்த குறுகலைக் கடந்துசெல்லும் நோக்கம் கொண்டது. இந்திய மொழிகளில் எழுதும் முதன்மையான அழகியல் விமர்சகர்களை முன்வைக்க முயல்கிறது
மொழி இணைய இதழ்