கூடங்குளம் கடிதங்கள்

அன்பின் ஜெமோ..,

புனைவிலக்கியம் தவிர்த்த, அனேக உங்களது கருத்துக்களில் இருந்து என் கருத்து மாறுபட்டு இருந்து வந்துள்ளது. முதல்முறையாக கூடங்குளம் மக்களின் போராட்டம் பற்றிய உங்கள் கட்டுரை என் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருப்பதைப் பார்க்கும் போது மகிழ்கிறேன்.

மேலை நாடுகள் தங்களின் லாப நோக்கத்திற்காக, வளரும் நாடுகளிடம் அவர்களின் தோல்வியுற்ற, தொழில்நுட்பத்தைத் திணித்து வருகிறார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன். செர்னோபிள் சம்பவத்திற்கு பிறகும், அது ருஷ்யாவில் இருந்து இறக்குமதி ஆகிறது என்ற காரணத்திற்காக அப்போதெல்லாம்(இப்போதும்!?) வாயைத்திறக்காமல் இருந்தவர்களை நினைக்கும் போது வியப்பும், அதிர்ச்சியும் தான் ஏற்படுகிறது.

மக்களின் இப்போராட்டம் வெல்லவேண்டும். மக்கள் சக்தி ஒன்றுபட்டிருக்கும் இச்சமயத்தில் நடக்கும் இப்போராட்டத்தினை ஊடகங்களும் சரியாக அடையாளப்படுத்த வேண்டும். நாமும் நம்மால்ஆனதை செய்வோம்.
நன்றி
அன்புடன்

-யெஸ்.பாலபாரதி
”..தீதும், நன்றும், பிறர் தர வாரா..”

வலைப்பதிவு:-http://blog.balabharathi.net/

*

வணக்கம்.கூடங்குளம் அணு மின் உலையை எதிர்த்துத் தென் மாவட்ட மக்கள் இடிந்தகரை எனும் இடத்தில் மிகப் பெரும் போரை  தொடங்கி உள்ளனர். 127 பேர் இன்று 6 வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர்.இவர்களுக்கு ஆதரவாக இருபது ஆயிரம்  பேர் தொடர் உண்ணவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் காலையில் வந்து இரவில் ஊருக்கு திரும்பி மீண்டும் காலையில் வந்து விடுகின்றனர்.பகல் முழுவதும் ஆறு நாட்களாக 20000 பேரும் பட்டினி கிடக்கின்றனர்.பள்ளி மாணவ,மாணவியர் சீருடையுடன் பள்ளியைப் புறக்கணித்து வந்து முழக்கம் போடுகின்றனர்.தமிழக வரலாற்றில் கண்டறியாத போராட்டம் இது என்று  அங்கு சென்று பார்த்த பின் தான் உணர்ந்தேன்.

வெளி உலகில் இப்போராட்டத்தின் பிரம்மாண்டம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.ஊடகங்கள் அரசுக்கு ஆதரவாக இருந்துகொண்டு சரியாக செய்தி வெளியிட வில்லை.சமூக உணர்வாளர்கள்  ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய போராட்டம் இது.இது குறித்து இணையதளம், கைபேசிகளிலும் போதுமான பிரச்சாரம் இல்லை.உடன் இச் செய்தியை அனைவருக்கும் forward செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது கூடங்குள மக்களின்வாழ்வியல்  பிரச்சனை மட்டுமல்ல,தமிழக மக்களின் உயிர்ப்பிரச்சனை மட்டுமல்ல,மனித இனத்திற்கே சவாலான பிரச்சனை என்பதைக் கருத்தில் கொண்டு போராடும் மக்களுடன் உறுதியாகக் கை கோர்ப்போம்.அனைவரும் சென்று வருவோம்.தமிழகம் முழுவதையும் ஆதரவாக்குவோம்.

தொடர்புக்கு:உதயகுமார் 9865683735 ,
புஷ்ப ராயன் 9842154073 ,
வைபா 9443962021

அன்புடன்,
பிரபாகரன்.

முந்தைய கட்டுரையானைடாக்டர்-ஓர் உரை
அடுத்த கட்டுரைஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை