கோழிக்கோட்டில் 23 முதல் 25 வரை நிகழவிருக்கும் கே.லிட் ஃபெஸ்ட் என்னும் இலக்கிய விழாவில் இவ்வாண்டும் கலந்துகொள்கிறேன். டி.சி.புத்தக நிலையம் ஒருங்கிணைக்கும் இந்த விழா இந்தியாவின் மிகப்பெரிய இலக்கியக் கொண்டாட்டங்களுள் ஒன்று.
சென்ற ஆண்டு என் அரங்கு ஒன்றும் கமல்ஹாசனுடன் நானும் பால் சகரியாவும் கலந்துகொள்ளும் அரங்கு ஒன்றும் இருந்தன. இவ்வாண்டு ஓர் அரங்கில் நானும் வீரான்குட்டியும் கவிதை பற்றி உரையாடுகிறோம். இன்னொன்றில் நான் மணி ரத்னத்திடம் உரையாடுகிறேன்
இவ்வாண்டு பதிப்பாளர்களுக்கான அரங்கில் விஷ்ணுபுரம் பதிப்பியக்கம் சார்பில் நண்பர் செந்தில்குமார் கலந்துகொள்கிறார்.
நான் 22 இரவில் கோழிக்கோடு வருவேன். 23 என் நிகழ்வு. 24 அன்று மணிரத்னத்துடன் நிகழ்வு. 24 காலையில் நாகர்கோயில் கிளம்புகிறேன்