கவிதைகள் இதழ்

அன்புள்ள ஜெ,

டிசம்பர் மாத கவிதைகள் இதழ் வெளியாகியுள்ளது. இவ்விதழில் ஜெயமோகன் மொழிபெயர்த்த தற்கால மலையாள கவிதைகள் தொகுப்பிலிருந்து கே. சச்சிதானந்தன் கவிதைகள் வெளியாகியுள்ளது.  

விக்ரமாதித்யன் கவிதைகள் குறித்து லட்சுமி மணிவண்ணன் எழுதியவிக்ரமாதித்யனை வகை செய்வது கடினம்என்ற கட்டுரையும், .நா.சு கட்டுரை தொடரில்புதுக் கவிதையின் எல்லைகள்என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. புதுவை தாமரைகண்ணன் எழுதிய ஆதிமந்தியார் (சங்க கால பெண்பாற் புலவர்) கவிதை பற்றிய குறிப்பும், மயிலாடுதுறை பிரபு ஆதித்ய ஸ்ரீநிவாஸ் கவிதைகள் குறித்து எழுதிய குறிப்பும் இடம் பெற்றுள்ளன.

https://www.kavithaigal.in/

நன்றி,

ஆசிரியர் குழு

(மதார்ஜி.எஸ்.எஸ்.வி. நவின்)

முந்தைய கட்டுரைThe Form and Formless
அடுத்த கட்டுரைஅநுத்தமா