விஷ்ணுபுரம் விழா பதிவுகள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

வணக்கம்,

முதன்முதலில் நான் கலந்து கொண்ட விஷ்ணுபுரம் விழா என்று சொல்வதை விடவும், இலக்கிய விழா என்று சொன்னால் மிக பொருத்தமாக இருக்கும்ஆனால் இலக்கிய நிகழ்வு என சொன்னாலும் ஒரு உறவினர் வீட்டு நிகழ்விலும், ஊர் திருவிழாவிலும் இருக்கிற கலகலப்பும், உற்சாகமும், ஆர்ப்பரிப்பும் தான் இரண்டு நாட்களிலும் உணர முடிந்தது.

முதன்முதலாக பல படைப்பாளிகள் , வாசகர்களை ஒரே இடத்தில் பார்த்ததும் உரையாடியதும் புத்துணர்வை  ஏற்படுத்தியது.இலக்கிய அமர்வு உரையாடல்களில் இருந்த நேர்த்தியை பார்த்த போது  இப்படிலாம் கூட ஒரு உரையாடல்களை நடத்த முடியுமா என ஆச்சரியம் வந்தது.

ஒவ்வொருவரின் நுட்பமான கேள்விபதில்களை கேட்கும் போது, எவ்வாறு ஒரு படைப்பை வாசிக்க வேண்டும் என்றும். எதை வாசித்தாலும் ஆழமாக வாசிக்க வேண்டும் என எனக்கு நானே சொல்லி கொண்டேன்.

முதல்நாளின் இரவு நடந்த குழு நாடகம் புதுவித அனுபவமாக இருந்தது. இதுவரை இம்மாதிரியான ஒன்றை கண்டதில்லை.சுவையான விருந்தும் அறிவு உரையாடலுமாக இரண்டாவது நாளும் நிறையும் போது மனம் இனியாவது படைப்பூக்கத்துடன் எதையாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் பெற்றது.

இந்தாண்டின் உருப்படியாக செய்த சில நற்செயல்களில் இவ்விருது விழாவில் கலந்து கொண்ட அனுபவத்தையும் சொல்வேன்.

இதை சாத்தியமாக்கிய தங்களுக்கும் 

விஷ்ணுபுர இலக்கிய வட்டத்திற்கும் 

நன்றிகள்.

அன்புடன்,

.மதன்குமார்.

வருடந்தோறும் விழாவுக்கு கோவையில் குவியும்  இலக்கிய வாசகர்கள் எண்ணிக்கை கூடியபடியேயிருக்கிறது டிசம்பர் 21,22 இரு நாட்கள் ..அரங்கில் 400 இருக்கைகள் நிரம்பி பலர் நின்றுக்கொண்டு ,இடம் கிடைக்காததால் அரங்குக்கு உள்ளே  நின்றபடியிருக்க ,இடம் கிடைக்காதவர்கள் அரங்குக்கு வெளியே  படிக்கட்டில் அமர்ந்து சக படைப்பாளிகளுடன் உரையாற்றிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

அமிர்தம் சூர்யா பதிவு

முந்தைய கட்டுரைWhat is more to offer?
அடுத்த கட்டுரைகீதையின் முகப்பில்- கடிதம்