மாடன் மோட்சம், நாடகம் விருதுக்கு

என் மாடன்மோட்சம் நாடகம் ஆலப்புழா மருதம் தியேட்டர்ஸ் அமைப்பால் நாடகவடிவமாக்கப்பட்டது. ஜோப் மடத்தில் இயக்குநர். நாடகவடிவம் ராஜ்மோகன் நீலேஸ்வரம்.

ஏற்கனவே என் நூறுநாற்காலிகள் நாடகவடிவில் பலமுறை மேடையேறியிருக்கிறது. மாடன் மோட்சம் அங்கதமும் மீபுனைவும் கலந்த ஒன்று

இந்நாடகம் கேரள சங்கீத நாடக அக்காதமியின் நாடகவிருதுக்காக  67 நாடகங்களில் இருந்து தேர்வான ஆறு நாடகங்கள் அடங்கிய குறும்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்நாடகம் உட்பட ஆறுநாடகங்களும் ஜனவரி 31 ல் கொல்லம் நகரில் அரங்கேற்றம் செய்யப்படும். அவற்றிலொன்று ஜூரிகளால் மாநில அளவில் விருதுக்குத் தேர்வாகும்.

நாடகக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைஅறிதலுக்கு அப்பால் – ரம்யா
அடுத்த கட்டுரைகாண்டீபத்தில் மெய்ப்பாடுகள் -இராச. மணிமேகலை