விஷ்ணுபுரம் விழா, கடிதம்

தேடிக் கைகொள்வோம், இல்லையென்றால்உருவாக்குவோம்“.

எழுத்தாளர்  இரா. முருகன்,

(பதினைந்தாவது விஷ்ணுபுரம் விருதாளர்.)

விழிக் கோணத்தை வேறொரு பரிமாணத்தில் விரிக்க வைத்த விஷ்ணுபுரம் விருது விழா.

என்னுடைய சாத்தியங்கள் முழுவெளிப்பாடு கொள்ளும் களமே தன்னறம் என்பது. அதில் இறங்கிச் செயலாற்ற நான் என் பிறப்பால் பணிக்கப்பட்டிருக்கிறேன்

எழுத்தாளர் ஜெயமோகன்.

எழுத்தாளர்களும், வாசகர்களும் சங்கமிக்கும் மகா சமுத்திரம் விஷ்ணுபுர விருது விழா. ஒரு மாநாடு போல வருடா வருடம் வருடக்கடைசியில்நடக்கும் இலக்கிய விழாஎழுத்தாளர்களை, பல கோணங்களில் பிரதிபலிக்கச் செய்து, மெருகேற்றிக் கொள்ளவும், தங்களைப் பட்டை தீர்க்கவும், வாசகர்கள் தங்களின் வாசகப் பார்வையை விசாலமாக்கிக் கொள்ளவும், எழுத்தாளர் ஜெயமோகன் தான் எழுதிய நூலின் பெயரால் அமைத்துக் கொடுத்த மகத்தான மேடை

தன் வாழ்நாளில் சிறந்த படைப்புகளை கொடுத்த மூத்த எழுத்தாளரை கெளரவிக்கவும், நன்றாக படைப்புலகில் சாதித்தும் சரியான ஒளி பெறாத சக எழுத்தாளர்களுக்கு மேன்மையான அங்கீகாரம் அளித்து வெளிச்சமிட்டு காட்டவும், அமைந்த எழுத்தாளர் வாசக மாநாடு.

நிகழ்வு இடைவேளை நேரங்களில் எழுத்தாளர்களை எழுத்தாளர்கள் சந்தித்துக் கொள்ளவும், வாசகர்கள் வாசகர்களை சந்தித்துக் கொள்ளவும் ஒரு பொன்னான வாய்ப்பாக அமைகிறது.எழுத்தாளர்கள் வாசகர்கள் என்கிற இரு துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்ளுகிற அழகியல் தருணம். ஓரிடத்தில் இருவருக்கும் வாய்ப்புகள் சரி சமமாக வழங்கப்படுவது அபூர்வமான காட்சிகள்.எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு சேர  கொடுக்கப்படும் ஊக்கமருந்தென இலக்கிய அமர்வுகள் அமைந்தன. ஆயுள் வரை தாங்கும் சஞ்சீவிதங்களை தாங்களே பட்டை தீர்க்கும் பொன்னான வாய்ப்பாக அமைந்தன என்றால் மிகையாகாது.

பல்வேறு வாசகர்கள் கேள்விக்கணைகளை தொடுக்க, படைப்பாளர்கள் தங்கள் நுண்புல உணர்வு சார்ந்த பதில்களால் அழகாக ஆத்மார்த்தமாக வெளிப்பட்டது.எழுத்தாளர் வாசகர்கள் உணர்வலைகள் படைப்புக்கடலில் அலையாடும் கணங்கள்.வாசகர்களிடமிருந்து வரும் எதிர்பாராத கேள்விகளை படைப்பாளர்கள் எதிர்கொண்ட விதம் யாவுமே அற்புதம்.

ஒரு தேர்ந்த பயிலரங்கமாக கற்றலும் கற்பித்தலும் நடப்பது தெரியாமலேயே நடந்தது.ஒரே இடத்தில் ஆகச் சிறந்த நூல்களை சலுகை விலையில் வாங்கிக் கொள்ளவும் உரிய தளமாக அமைந்ததுதங்க இடம் அமைத்து உணவு கொடுத்து செவிக்கும் மனதிற்கும் இன்பம் துய்க்க செய்த அனைத்து விஷ்ணுபுர வாசக அமைப்புக்கும்,மூத்த எழுத்தாளர் தனக்குரிய முதன்மையான பணி இதுதான் என்பதை வரும் எழுத்தாளர் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக தன் தோள்மேல் சுமக்கிற சுகமான சுமையாக இதை செய்து வருகிற எழுத்தாளுமை ஜெயமோகன் அவர்களுக்கு  அன்பும் நன்றியும்.

மேரிசுரேஷ்

படங்கள் மோகன் தனிஷ்க்

முந்தைய கட்டுரைநாடக இயக்குநர் நரேன், கடலூர் சீனு
அடுத்த கட்டுரைசிவ. விவேகானந்தன்