புத்தகவிழாவிலே…

சென்னை புத்தகக் கண்காட்சி தமிழகத்தின் இலக்கியக் கொண்டாட்டம். தமிழகத்தின் அறிவியக்கத்தை நேருக்குநேர் முழுமையாகப் பார்க்கும் அனுபவம் அது. நூல்களை நாம் இன்று இணையம் வழியாகவே வாங்கலாம். ஆனால் அத்தனை நூல்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் அனுபவம் உருவாக்கும் புரிதல் முற்றிலும் பிறிதொன்று.

ஒவ்வொரு ஆண்டும் அப்போது உருவாகி வந்திருக்கும் பொதுப்போக்கு என்ன என்பதை நான் புத்தகக்கண்காட்சி வழியாகவே அறிகிறேன். சற்று கவனிப்பவர்களுக்கு ஓர் ஆண்டில் எந்த வகையான நூல்கள் புதியதாக வருகின்றன, எந்த வகையான நூல்கள் குறைந்து இல்லாமலாகி விட்டிருக்கின்றன என்பது தெரியும். உதாரணமாக பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஏராளமாக விற்பனையில் இருந்த கணிப்பொறி சம்பந்தமான தமிழ்நூல்கள் இப்போது அதிகமில்லை. அதற்கு முந்தைய பத்தாண்டில் மிக அதிகமாகக் கண்ணில் பட்ட தன்னம்பிக்கைநூல்கள் இப்போது குறைந்துவிட்டன.

அப்படிப் பார்க்கையில் எனக்கு எப்போதுமே வியப்பூட்டுவது எனக்கு தமிழ் அறிவியக்கத்தின் ஒரு சிறு பகுதிதான் தெரியும் என்பதுதான். நான் அறிவியக்கத்திற்குள்ளேயே இருந்துகொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு அக்கறையுள்ள, நான் பங்களிப்பாற்றும் சூழலை மட்டுமே அறிந்திருக்கிறேன். அதற்கு வெளியே ஒரு மிகப்பெரிய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை புத்தகக் கண்காட்சிகளில் மட்டுமே பார்க்கமுடிகிறது.

 

விஷ்ணுபுரம் அரங்கு எண் 205 மற்றும் 206.

 

இந்த ஆண்டு பல ஆண்டுகளாகக் கிடைக்காமலிருந்த என்னுடைய பல நூல்கள் மறுபதிப்பாக வெளிவந்துள்ளன. புதிய நூல்கள் சிலவும் வெளிவந்துள்ளன.

வாசகர்களை வரவேற்கிறோம்.

புதிய நூல்கள்

இந்துஞானம் – அடிப்படைக்கேள்விகள் வாங்க

இந்துஞானம் அடிப்படைக்கேள்விகள் என்னும் நூல் பரவலாக இந்துமெய்யியல் சார்ந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கான சுருக்கமான பதில்களின் தொகுப்பு.

கீதையை அறிதல் வாங்க

கீதையை அறிதல். கீதை பற்றி நான் ஆற்றிய பேருரையின் எழுத்துவடிவம். உரை ஆதலால் வேகமான ஓட்டம் கொண்டதாக உள்ளது. ஆனால் செறிவானதாகவும் உள்ளது. கீதையை ஒரு நவீன வாசகன் அறிமுகம் செய்துகொள்வதற்கு உகந்த நூல்

இரு கடல் ஒரு நிலம் வாங்க

நான் என் நண்பர்களுடன் அமெரிக்காவில் கிழக்குக் கடற்கரையில் இருந்து (நியூயார்க்) மேற்குக்கடற்கரை வரை (கலிஃபோர்னியா) செய்த நீண்ட கார்ப்பயணத்தின் அனுபவக்குறிப்பு. உடன் வந்த நண்பரான விஸ்வநாதன் எழுதியது.

வடகிழக்கு மாநிலங்களில் நான் என் நண்பர்களுடன் மேற்கொண்ட பயணங்களின் நேர்ப்பதிவு. வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய நம் புரிதல் உள்நோக்கம் கொண்ட இதழாளர்களல், அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது. இவை கண்கூடான காட்சிகளின் வழியாக உருவாகும் சித்திரங்கள்

சூரியதிசைப்பயணம் வாங்க

 

இமையமலை அடிவாரத்து மாநிலங்கள் வழியாகச் சென்ற பயணங்களின் பதிவுகள். பனியும் அமைதியும் உறைந்துகிடக்கும் ஆளற்ற நிலம் வழியாகச்செல்லும் போது கண்கள் மட்டுமே செயல்படுகின்றன. உள்ளமும் கண்களாகின்றது.

எழுகதிர் நிலம் வாங்க

 

மறுபதிப்புகள் 

 

 

 

ஊமைச்செந்நாய் வாங்க

இந்தியப்பயணம் வாங்க

பிரதமன் வாங்க

ஆழ்நதியைத்தேடி வாங்க

உள்ளுணர்வின் தடத்தில் வாங்க

வேங்கைச்சவாரி வாங்க

இந்திய ஞானம் வாங்க

வெள்ளிநிலம் – அச்சில் உள்ளது

 

முந்தைய கட்டுரைவிழா, குருநாதன்
அடுத்த கட்டுரைசிவா கிருஷ்ணமூர்த்தி