வியாச தரிசனம்-2
வியாச தரிசனம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
தங்களின் வியாச தரிசனம் 2 ல் வரும் பகுதி.
“பாஞ்சாலி ஐந்து கணவர்களை மணந்துகொள்கிறாள். பாஞ்சாலம் என்பது இன்றைய இமாச்சல பிரதேசம். காம்பில்யம், சத்ராவதி இரண்டும் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவை. அப்பகுதியில் இன்றும்கூட ஒரு பெண் ஐந்து கணவர்களை மணப்பதென்பது வழக்கமாக உள்ளது. இப்போதும் அப்படி வாழக்கூடிய தம்பதிகளை பற்றிய குறிப்பு ஒன்றை எனது இணையதளத்தில் பிரசுரித்திருக்கிறேன். அது இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு வழக்கம். அத்தகைய வழக்கத்தின்படிதான் பாஞ்சாலி ஐவரை மணக்கிறாள். அவ்வாறு மணப்பது அவளது அடிமைத்தனத்தை குறிக்கவில்லை, அவள் சக்கரவர்த்தினி என்பதையே குறிக்கிறது“
அங்கு மட்டும் அல்ல. நமது தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தோடர் இன மக்களும் இதே போன்ற வழக்கத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கொண்டிருந்தார்கள். ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால் கணவனின் சகோதரர்கள் அனைவரும் அப்பெண்ணின் கணவர்கள் ஆகி விடுவர். இது அவர்களது பாரம்பரிய வழக்கம். அவர்கள் இனத்தில் பெண்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் எனவும் எந்த முடிவையும் எடுக்கும் உரிமை பெண்களுக்தான் உண்டு எனவும் என்னுடன் ஒரு பயிற்சி வகுப்பில் பங்கெடுத்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் கூறினார்.
அன்புடன்,
காந்தநாதன்
வயநாடு