You always present the path of hope. You are an optimist. It is this positive approach that attracts so many people toward you. But is this approach closer to the truth? Is it an illusion? Shouldn’t the writer convey the truth?
Pessimism is actually our hypocrisy.
நவம்பர் 29இல் இருந்து டிசம்பர் 1 வரை தியான வகுப்பு நடப்பதான அறிவிப்பு வந்தது.தியானமும் பயில பல நாட்களாக எண்ணம் இருந்தது. நண்பரின் துணையும் கிடைத்தது. கூகிள் கோவையிலிருந்து நான்கு மணிநேரப் பயணம் என்றதால் முதல் நாளே கிளம்பிப் போகலாமா எனும் எண்ணம் எழுந்தது. நித்யவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அந்தியூர் மணியும் மாலையில் வரலாம் என அனுமதி தந்தார்.