மூதாதையர் குரல் -கடிதம்

மூதாதையர் குரல்

ஆசிரியருக்கு,

இந்திய வரலாற்றையே ஒரு சிறிய பெட்டியில் வைத்து பரிசளித்து   விட்டீர்கள்.ஒரு எம்.ஜி.ஆர். ரசிகரின்  கேள்வி உங்களை சீண்டி பதம் பார்த்திருக்கிறது. இலாபம் என் போன்ற வாசகருக்குத்தான்.

எத்தனை உழைப்பு நம் மூதாதையுருக்கு,கண்ணீர் மல்குகிறது.நதிகளின் கரைகளில் பிறந்த நம் நாகரீகம், நம்மை எப்படி பண்படுத்தி நம் பண்பாட்டை உருவாக்கி இருக்கிறது.இந்திய குடும்பம் என்ற அமைப்பு, நம் நாட்டை இன்று உலக அரங்கில் நம்மை நிற்க வைத்திருக்கிறது.நேருவைப் பற்றி  தப்பாக வைத்திருந்த அபிப்பிராயத்தை தாங்கள் அவர் மீது வைத்திருக்கிற கண்ணோட்டம் உடைத்தெறிந்து விட்டது.

பஞ்சமும் பட்டினியும் நம் மூதாதையர்களை மேலும் பண்புடையவர்கள் ஆக்கியதே தவிர ஒருக்காலும் அவர்கள் பேராசை கொண்டு பிறநாட்டு செல்வங்களை அபகரிக்கவில்லை என்பதை எண்ணும் போது உலக அரங்கில் நாம் நிமிர்ந்து நிற்கிறோம்.

ஒரு நாடு எப்படி வளர வேண்டும் என்பதற்கு நம் இந்திய நாடே முன் உதாரணம்.அதற்கு காரணம் நம்முடைய மூதாதையர்கள்.அவர்கள் சிந்திய வியர்வையும்,இரத்தமும் நம்மை வாழ வைத்து கொண்டிருக்கிறது.இந்திய குடும்பங்களின் கலாச்சாரத்தை பற்றி மேலைநாட்டினர்கள் உண்மையாக ,சரியாக தெரிந்து கொண்டால் அவர்கள் நமக்கு நன்றிக்கடன் பட்டவர்கள்.தங்கள் உரைவீச்சு வாழ்வீச்சைவிட கூர்மையான இருந்தது.

வாசகன்,

தா.சிதம்பரம்.

முந்தைய கட்டுரைIs complete knowledge possible?
அடுத்த கட்டுரைதிருட்டுக்கு அனுமதிகோரல்…