சித்பவானந்தர்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்!
வணக்கம்.‍‍நமஸ்காரமும்.’உங்களுடைய சித்பவானந்தர் பற்றிய‌ கேள்விக்கு நிச்சயம் பதில் வராது’ என்றே என் நண்பர் கூறியிருந்தார்.நீங்கள் பதில் அளித்தது எங்க‌ளுக்கு ஆச்சரியமே.

பதில் எழுதியதற்கு மீண்டும் வந்தனம்,
என் கேள்வியின் நோக்கம் சுவாமி சித்பவான‌ந்தரை ஒரு sectarian
போல‌ உங்க‌ளுடைய ‘சிங்கார‌வேல‌ரின் பிராம‌ண‌ வெறுப்பு’ க‌ட்டுரை ஆக்கி விட‌க்கூடாதே என்ப‌துதான்.அத‌ற்கு உங்களுடைய‌ ப‌திலில் கூறியுள்ள‌
கீழ்க்காணும் வாச‌க‌ங்க‌ள் அட்ச‌ர‌ ல‌ட்ச‌ம் பெறும்!

//சித்பவனாந்தரைப் போன்ற ஒருவர் சாதி சார்ந்த விஷயங்களைப் பதிவுசெய்வார் என்று நான் நினைக்கவில்லை. அமைப்பின் உட்பூசல்களை அவர் பெரிதாக எண்ணுவார் என்றும் நினைக்கவில்லை. தன் அமைப்பில் சாதிக்காழ்ப்பு உள்ளே நுழையாதபடியே அவர் கடைசிவரை வைத்திருந்தார். எவ்வகை சாதிக்காழ்ப்பும்-  மேல் நோக்கியோ கீழ் நோக்கியோ.//

இது, இதுதான் என‌க்குத் தேவை.’பெரியார் காங்கிர‌ஸை விட்டு வெளியேறிய‌த‌ற்குப் பிராம‌ண‌ மேட்டிமைத்த‌ன‌ம் தான் கார‌ண‌ம் என்ற குற்றச்சாட்டைப் போல‌ சித்‌ப‌வான‌ந்த‌ருக்குமா ந‌‌‌ட‌ந்திருக்கும்? இருந்தாலும் இருக்க‌லாம்’ என்று உங்க‌‌ளுடைய‌ வாச‌க‌ர்க‌ள் நின‌த்துவிட‌க்கூடாத‌ல்ல‌வா?

//ஊட்டி மடம் சித்பவானந்தரின் குடும்பச்சொத்தால் அமைக்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது//

ஓர் இய‌க்க‌ம் தா‌ன‌ம‌ளிப்ப‌வ‌ர் சொல்ப‌டி ந‌ட‌க்க‌ நிர்ப‌ந்திக்க முடியுமா? சுவா‌மி சித்‌ப‌வான‌ந்த‌ரே  அப்ப‌டி நினைத்திருக்க‌ மாட்டார்.

திருப்ப‌ராய்த்துறை த‌போவ‌ன‌ம் ஆர‌ம்பித்த‌ பின்ன‌ர் மீண்டும் சுவாமி த‌ன்னை ம‌ட‌ம், மிஷ‌னுட‌ன் இணைத்துக் கொண்டார். 1940 க‌ளில் இணைந்து மீண்டும் 1970க‌ளில் வெளியேறினார். அப்போதுதான் அவரிடம் பயிற்சி பெற்ற‌ பிர‌ம‌ச்சாரிக‌ளுக்கு ச‌ந்நியாச‌ம் அளித்த‌து பிர‌ச்ச‌னை ஆயிற்று.

சுவாமி சித்ப‌வான‌ந்தரிடம் வ‌வேசு ஐய‌ர் த‌ன‌து ப‌ர‌த்வாஜ‌ ஆசிர‌ம‌த்தை ஒப்படைத்து விட்டுத் த‌ன் ம‌க‌ளுட‌ன் குற்றால‌ம் அருவியில் குதித்து மாண்டார்.
அதுவே சுவாமியின் இரண்டாவ‌து நிறுவ‌ன‌ம்.

சுமார் 25 ஆண்டுக‌ளுக்கு மேலாக‌ ம‌ட‌ம் மிஷ‌ன் பெய‌ர் தாங்கி நின்ற‌தாலேயே தபோவன வள‌ர்ச்சியை சுவாமி காண்பிக்க முடிந்த‌து. ஒரு நிறுவ‌ன‌ம் த‌னிப்ப‌ட்ட‌ ந‌ப‌ர்க‌ளால் ம‌ட்டுமே வளர்கிற‌து என்ப‌து ச‌ரியா? சுவாமி த‌மிழ் நாட்டின் பிற ப‌குதிக‌ளில் ஊக்க‌மாகச் செய‌ல் ப‌ட்ட‌தாலேயே ,அன‌று அவ‌ரும் மிஷனுக்குள்ளேயே இருந்து செயல் பட்டதால் தலைமை மடம் தமிழ்நாட்டில் தான் த‌னியாக‌ எதுவும் செய்ய‌வில்லை.முதல் முறை ஊட்டி ம‌ட‌த்தினை விட்டு வெளியேறிய‌போது த‌ன் ‘குடும்ப’ சொத்தினை விட்டு வில‌கிய‌துபோல, இர‌ண்டாவ‌து முறை ம‌ட‌த்தின் பெய‌ரைப் ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ள‌ர்த்த‌ நிறுவ‌ன‌ங்க‌ளை மிஷ‌னிட‌ம் சுவாமி ஒப்ப‌டைக்க‌வில்லை.தானே அவ‌ற்றை நிர்வ‌கித்தார்.

அவ‌ர் ச‌ன்னியாச‌ம் அளித்த‌ ச‌ன்னியாசிகளில் இன்று த‌போவ‌ன‌த்தின் கட்டுப்பாட்டில் இருப்ப‌வ‌ர்க‌ள் மிகச் சில‌ரே.

ஸ்ரீ ராம‌கிருஷ்ண‌ ம‌ட‌த்தில் 12 ஆண்டுக‌ள் வெள்ளை வேட்டி அணிந்து பிர‌ம‌ச்சாரியாக‌ ஒரு சைத்த‌ன்ய‌ நாம‌ம் தாங்கிப் ப‌ணியாற்ற‌ வேண்டும்.
பின்ன‌ர் பேலூரில் பயிற்சி வ‌குப்புக்க‌ள்.அத‌ன் பின்ன‌ரே காவி வேட்டி அளிக்க‌ப்ப‌ட்டு சன்னியாச‌ம். ச‌ன்னியாச‌ம் இன்றுவ‌ரை த‌லைமை பீட‌த்தில் த‌லைவ‌ரால் தான் த‌ர‌ப்ப‌டுகிற‌து.குடும்ப‌ஸ்த‌ர்க‌ளுக்கு ம‌ந்திர‌ உப‌தேசம்=மந்திர தீட்சை= உப‌ த‌லைவ‌ர்க‌ள் த‌ருவ‌த‌ற்கு அநும‌தி உண்டு.

சுவாமி சித்ப‌வான‌ந்த‌ரைப் ப‌ற்றி ஏதாவ‌து சொல்லும் போது அவ‌ருடைய‌
தியாக‌த்திற்கும், மேன்மைக்கும் எந்தக் க‌ள‌ங்க‌மும் வ‌ந்துவிட‌க்கூடாது என்று ஜாக்கிர‌தையாக‌ இருக்க‌ வேண்டும். பிராமண‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்ட‌ முனைந்து அது மாற்று திசையில் வேலை செய்ய அனும‌தித்து விடக் கூடாது.
ஏனெனில் சுவா‌மி சித்ப‌வான‌ந்த‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் சாதி,ம‌த‌ம், வ‌குப்பு வாத‌ம், அர‌சிய‌ல் அனைத்துக்கும் அப்பாற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்.

சும்மா, ஒரு சுவார‌ஸ்ய‌த்திற்காக‌ என் கீழ்க்காணும் என் ஆக்க‌த்தைப் ப‌டித்துப்பார்க்க‌வும்.

“ம‌ட‌த்தின் பெய‌ரை கெடுக்காம‌ல் விட்ட‌க‌தை

http://classroom2007.blogspot.com/2010/10/blog-post_03.html 
மீண்டும் வ‌ந்த‌ன‌மும் நன்றியும்!

கே.முத்துராம‌கிருஷ்ண‌ன்

சித்பவானந்தர் ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைகணிதம்-ஒருகடிதம்
அடுத்த கட்டுரைபஷீர் ஆவணப்படம்