அன்புள்ள ஜெ ஐயா,
வணக்கம்.நலம் நலம் அறிய அவா. தங்களின் கதாநாயகி நாவலை சமீபத்தில் வாசித்தேன்.இந்த நாவலை பற்றிய அறிமுகம் எனக்கு தங்களின் நேர்காணலை காணும் போது அறிந்து கொண்டேன்.அந்த புத்தகத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்தேன் இரண்டு வரி படித்தேன்.ஒன்னும் புரியவில்லை பிறகு தங்களின் கதாநாயகி நாவலை வாசிக்க தொடங்கினேன்.முதலில் தங்களின் இந்த வகையான நாவலின் தொடக்கத்திற்கு மிகவும் நன்றி ஐயா.
கதாநாயகி நாவலை ஒரு மிகச் சிறந்த உளவியல் நாவலாக நான் காண்கிறேன்.ஒவ்வொரு பகுதியையும் வாசிக்கும் போது அதற்கான உளவியல் காரணிகளோடு ஒப்பிட்டு கொண்டேன்.ஒரு அற்புதமான நாவல்.எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிகச்சிறந்த உளவியல் அணுகுமுறை இந்த நாவலை நான் தொடங்கிய போது என்னால் இரவில் சரியாக தூங்க இயலவில்லை.கனவில் கூட அதை பற்றிய நினைப்புதான்.அந்த நாவலை முடித்த போது தான் எனக்கு சரியான உறக்கம் வந்தது.
இதில் கூறப்படும் schizophrenia என்ற மனநோய் குறித்து படித்துள்ளேன் உளவியல் துறை என்பதால்.இந்த நோய்க்கான ஒரு மிகச்சிறந்த அணுகுமுறையாக இந்த நாவல் இருக்கிறது.இந்த நாவலின் ஆளுமை என்னை மிகவும் பாதித்து உள்ளது. தாங்களின் இதுபோன்ற படைப்பை இன்னும் எதிர்பார்க்கிறேன்.மிகவும் நன்றி ஐயா.வாழ்த்துகள் தொடருங்கள்.
நன்றி.
அன்புடன்
க. அட்சயா