ஹிரியண்ணா இந்தியவியல் ஐரோப்பாவில் தோன்றி வலுப்பெற்றுவிட்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இந்தியவியலில் இந்தியர்களின் பங்களிப்பு நிகழத்தொடங்கிய காலகட்டத்தில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். ஆகவே ஐரோப்பிய இந்தியவியலாளர்களின் பார்வையை விரிவாக்கியும், தேவையான இடங்களில் மறுதலித்தும் தன் பார்வைகளை முன்வைத்தார். ஐரோப்பியர்களிடமிருந்து கற்றுக்கொண்ட மேலைத்தத்துவம் சார்ந்த ஆய்வுமுறையை இந்திய தத்துவசிந்தனைமேல் செலுத்தியவர்களில் ஒருவர்.
தமிழ் விக்கி ஹிரியண்ணா