யானையைச் சுருக்குதல் – கடிதம்

அன்புள்ள ஜெ ,

இன்று ஆணையில்லா கதையை பற்றி விஷ்ணுபுரம் ஐரோப்பா இலக்கியவட்டம்
நண்பர்களுடன் உரையாடினோம். அப்போது ஒன்று தோன்றியது. யானையை சுருக்கி
அறியும் அந்த கடுவா மூப்பில், கலை என்பது கூட உலகை சுருக்கி அறிவது தான்.

உங்களுடைய ஆரம்ப கால கதைகள், தந்தையிடம் வெளிப்படுவது ஒரு விதமான பதட்டம்
தங்களைப் பற்றி இருக்கும். எப்படி உலகியல் வாழ்வில் நீங்கள் வெற்றி
பெறுவீர்கள் என்ற பதட்டம் வெளிப்படும்.

இந்த கதையில் ஒரு வட்டம் முழுமை அடைகிறது. எப்படி கடுவா யானையை சுருக்கி
அதில் ஆளுமை செலுத்துகிறார் அதே போல் தான் நீங்கள், உலகை கலையாக சுருக்கி
ஆளுமை செலுத்துகிறீர்கள். அந்த கடுவா உங்கள் தந்தையிடம் சொல்வது நீங்கள்
சொல்வது கூட தான் என்று தோன்றியது. இது முற்றிலும் வேறு உலகம், தர்க்கம்
கடந்து மலை தெய்வங்கள் வாழ கூடிய இடம்.

அற்புதமான நகைச்சுவை கதையை இருந்தும் இது உங்கள் ஆழம் வெளிப்படும் கதையும் கூட.

நன்றி

அசோக் சாம்ராட்

அன்புள்ள ஜெ

இன்று நான் என் வகுப்பில் துளி கதையைச் சொன்னேன். சுருக்காமல் அப்படியே சொன்னேன். எட்டாம் வகுப்பு மாணவர்கள் அப்படி ரசித்துக் கேட்டார்கள். சிரிப்பு, கூச்சல். கதை சொல்லி முடித்ததும் கதை என்ன சொல்கிறது என்று கேட்டேன். நாய் செய்துவைத்த சமரசம் அத்தனைபேருக்குமே புரிந்தது. நாய் அன்பானது, மனிதர்கள் சண்டைபோட்டாலே நாய் அப்செட் ஆகிவிடும் என்று பெண்குழந்தை சொன்னதும் சிலிர்த்துவிட்டேன். ஒரு மகத்தான கதை எந்த வடிவிலானானும் சோபையை இழக்காது என்று தெரிந்தது

கிருஷ்ணமணி

முந்தைய கட்டுரைDid the Indian caste system originate in the south?
அடுத்த கட்டுரைசம்பந்தன்