அன்புள்ள ஜெ நேற்று உங்கள் இணையதளம் வழியாகத் திரு லாரி பேக்கர் அவர்களைப் பற்றி எழுதியதை வாசித்தேன். அவரைப் பற்றி எழுதிய ஒரே தமிழ் எழுத்தாளர் தாங்கள் தான். மிக்க நன்றி. அவருடைய மனைவி டாக்ட்ர் எலிசபெத் எழுதிய ‘the other side of the laurie baker’ புத்த்கமும் சுவாரசியமானது. நான் கடந்த 7 வருடங்களாக அவருடைய எழுத்துக்கள், கட்டிடப் புகைப்படங்கள், video முதலியவற்றை சேகரித்து வருகிறேன். அவ்ர் மறைந்ததும் திண்ணையில் ஒர் அஞ்சலிக் கட்டுரை எழுதினேன்.
 
அன்புடன்
சேது வேலுமணி
செகந்திராபாத்
 

அன்புள்ள வேலுமணி

தாமதமான கடிதத்துக்கு மன்னிக்கவும்

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

லாரிபேக்கர் பற்றிய கடிதம் கண்டேன். லாரிபேக்கர் பாணி கட்டிடங்கள் நம் தட்பவெப்பநிலைக்கு தாக்குபிடிக்கின்றன. ஆனால் நம்முடைய கடுமையான உபயோகத்துக்கு நிற்பதில்லை என்று சொல்கிறார்கள்

ஜெ

இணைப்புக்கள்

காந்தியும் நானும்

ஈரோட்டில்..