சேரன்:விமரிசன அரங்கு

 1980களில் ஈழப் போராட்டம் கொழுந்து விட்டெரிந்து கனன்று கொண்டிருந்த காலகட்டத்தில் சேரனின்  கவிதைகள் தமிழ்க் கவிதையுலகில் மிகவும் தீவிரமாகப் பேசப்பட்டவை. ஆனால் இன்று இரு தசாப்தங்களின் பின்னால் அவற்றின் கற்பனாவாதப் பண்பு, தற்காலிக எழுச்சி போன்ற விமர்சன உச்சாடனங்களுக்கும் அப்பால் அந்த மன எழுச்சிகளுக்கு அடிப்படையாக அமைந்த ஒடுக்குதல் குறித்துப் பேசுவதற்கான தளம் அன்றும் போல் இன்றும் வாய்த்து நிற்கிறது.

புரட்சிகரம் என்பது எப்போதும் இளமைக்கால சாகசங்களுடன் மாத்திரமே பொருத்திப் பார்க்கப்பட வேண்டியவை என்பது போன்ற விமர்சனங்களை மீண்டும் மறுபரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டிய அவசியத்தை இலக்கியத்தில் அதுவும் குறிப்பாக சமகால ஈழத்துக் கவிதையுலகின் இன்றைய இடர் சூழ்ந்த காலத்துள் எழுப்புவது பொருத்தப்பாடுடையது. அதற்கான களமாக சேரனின் “இரண்டாவது சூரியோதயம்” என்ற கவித்தொகுப்பு குறித்த இக் கலந்துரையாடல் தளம் அமையும.

 எனவே தமிழ்க் கவிதை ஈடுபாடு கொண்ட அனைவரையும் இக் கலந்துரையாடலில் பங்கு பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

காலம் – 15-03-2009

 ஞாயிறு(மாலை 6.00 மணி)

 இடம்;; – 36 Salamander Street Toronto, ON Canada

தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கங்கள் -: (647) 237-3619, (416) 500-9016

கலந்துரையாடல் ஏற்பாடு சார்பாக

 முரளி

ரத்தம் காமம் கவிதை:சேரனின் கவியுலகு

அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்

எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்

கோடுகளை மீறி…ஆழியாளின் கவிதைகள்

பேராசிரியர் மௌனகுரு

கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு

சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்

முந்தைய கட்டுரைஅனல்காற்று:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 13