செப்டம்பர்/அக்டோபர் மாதங்கள் என்பது அமெரிக்காவில் கோடை முடிந்து இலையுதிர் காலப்பருவம் வரும் காலம் மட்டுமல்ல. ஆண்டு முழுதும் நாங்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருந்த பூன் இலக்கிய முகாம் நடக்கும் காலமும் கூடத்தான். இந்த ஆண்டு பூன் தத்துவ மற்றும் இலக்கிய முகாமை முன்னிட்டு, இலையுதிர்காலத்தின் முதல் நாளான இன்று கலிஃபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு வந்திறங்கிய தங்களையும், அருண்மொழி அவர்களையும் நம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அனைவரது சார்பாகவும் நேரில் சந்தித்து வரவேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
தங்களது இந்த பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வால்நட் க்ரீக்–ல், வரும் செப்டம்பர் 26, வியாழன் அன்று வாசகர் சந்திப்பு ஒன்றை விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஒருங்கிணைத்துள்ளோம்.
நிகழ்வு நடக்கும் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நிகழ்விற்கு வாசகர்கள், நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நன்றி !
சாரதி