கேரளத்தின் கணக்கு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் 

மீண்டும் உங்களை தொடர்பு கொள்ள வாய்ப்பு அமைந்தமைக்கு இறைவனுக்கு நன்றி.

அக்கதை திருவனந்தபுரத்தின் கதை. அதற்கிணையான வாழ்வனுபவங்கள் அடைந்தவர்கள் பலர் இருப்பார்கள்.”

மேற்கண்ட வரிகள் தான்  இந்த மின்னஞ்சலுக்கு காரணம்.

நான் 1962 பெப்ரவரியில் திருவனந்தபுரத்தில் பிறந்து 1979 வரை அங்கேயே வாழ்ந்து பின்னர் கல்வி காரணமாக மதுரை, பின்னர் தூத்துக்குடியில் கல்வி முடித்து அங்கேயே கல்லூரியில் 2016 வரை பணிபுரிந்து  தற்போது பணி ஓய்வுக்கு பின்னர் நாகர்கோவிலில் வசித்து வருகிறேன். 1999 ல் தந்தை 2002ல் தாயார் ஆகியோர் மறைவுக்கு பின்னர் திருவனந்தபுரம் எனக்கு அந்நிய மாகிவிட்டது .எனது தந்தை சாலை பஜாரில் 1953முதலே வியாபாரம் செய்து வந்தார் 

( .மாதவன் அவர்களின் நெருங்கிய நண்பர்).

நானும் சிறுவனாக இருக்கும்போதே பள்ளிக்கூட நேரம் முடிந்ததும் கடைக்கு சென்று விடுவேன்.ஆதலால் சாலை பஜாரில் பெரும்பாலான நிகழ்வுகள் இன்றும் என் நினைவில் உள்ளது.கெத்தேல் கடைக்கு நான் இரண்டு மூன்று முறை என் நண்பர்களுடன் சென்றிருக்கிறேன்.அப்பொழுது சாப்பிட்டு விட்டு நான் என்னுடைய தொகையை கொடுத்து விடுவேன் என் நண்பன் ஒருவன் கொடுக்க மாட்டான் . அவனிடம் கேட்டால்

எனிக்கு இவிடே பற்றுண்டடாஎன்று சொல்லி விடுவான்.நானும் மேலும் ஏதும் கேட்க மாட்டேன்.பின்னர் 2013ல் தங்கள் சோற்றுக் கணக்கு கதையை நான் படித்த போது தான் எனக்கு புரிந்தது அவன் கெத்தேல் சாகிப் கணக்கில் தான் சாப்பிட்டு இருந்தான் என்று. அந்த காலத்தில் சாலை பஜாரில் எங்கள் கடையருகிலே பல ஹோட்டல்கள் இருக்கும் போதே பல மூடை தூக்கும் தொழிலாளிகள் மதிய உணவுக்கு கெத்தேல் கடைக்குப் தான் செல்வார்கள்.அது ஏன் என்பதை சோற்றுக் கணக்கு கதை தான் புரிய வைத்தது..மாதவன் அவர்கள் கதையில் வரும் பல கதாபாத்திரங்கள் நான் நேரில் கண்டவர்கள்.அதைப் போலத்தான் தங்களின் பல கதாபாத்திரங்கள் எனக்கு பலரையும் நினைவு படுத்துகிறது.

நன்றியுடன் 

துரைராஜ் சுகுமார்.

முந்தைய கட்டுரைமொழியாக்கமும் படைப்பாக்கமும்
அடுத்த கட்டுரைவாதூலன்