பிளிறல்: சிறுகதை: சரவணன் சந்திரன்

ஒடியன் ஆங்காங்கே துருத்தியிருக்கிற பாறைகளை ஏந்திக் கோரைப் பற்களைப் போலத் தோற்றமளித்த மலைக் குகை வாயின் ஓரத்தில் அமர்ந்து, தலைக்கு மேல் கூடாரத்தைப் போலக் கவிந்திருந்த கோங்குமர இலைக் கூட்டத்தின் இடைவெளியில் இத்துணூண்டாகத் தெரிந்த வானத்தின் வடகிழக்கு மூலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். காரியான் சொன்னதைத் துல்லியமாக நினைவில் நிறுத்தினான். “ஈசானிய மூலையில மூணு தரம் வெடுக்வெடுக்குன்னு மின்னல் வெட்டும். அந்த நேரத்தில சரியா அதை நீ உச்சாடனம் பண்ணிப் புதைச்சு வைக்கணும்” என்று சொல்லி இருந்தான்.

பிளிறல்: சிறுகதை: சரவணன் சந்திரன்

முந்தைய கட்டுரைDancing with Gods.
அடுத்த கட்டுரைஅடிமைசாசனம் – கடிதம்